கிரிக்கெட் ஒளிபரப்பு: ஈ.எஸ்.பி.என். வழக்கு
டெல்லி:
இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஜீ டிவிக்கு வழங்க இந்திய கிரிக்கெட்வாரியம் முடிவெடுத்திருப்பதை எதிர்த்து ஈ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையைப்பெற "ஜீ டிவி நிறுவனம் ரூ.1,200 கோடி ரூபாயையும், ஈ.எஸ்.பி.என்-ஸ்டார் "டிவி நிறுவனம் 1,060 கோடிரூபாயையும் தர முன்வந்தன. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒளிபரப்பு உரிமையை வாங்க ரூ.1,500 கோடிரூபாயை நிர்ணயித்தது.
இதை இரு டிவி நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டன. இருப்பினும் ஒப்பந்தப் படிவத்தில் ஜீ டிவி அதிக தொகைகுறிப்பிட்டிருந்ததால், அதற்கே முன்னுரிமை அளித்து ஒளிபரப்பு உரிமை வழங்கப் போவதாக கிரிக்கெட் வாரியத்தலைவர் ஜக் மோகன் டால்மியா தெரிவித்தார்.
இந்த முடிவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஈ.எஸ்.பி.என்- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வழக்குதொடர்ந்துள்ளது. இது குறித்து அந் நிறுவனத்தின் மேலாளர் ரிக் டோவே கூறுகையில்,
இது துரதிர்ஷ்டவசமான முடிவு. இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்திருக்கும் விதிகளைப் பூர்த்தி செய்வதில் எங்கள்நிறுவனம் தான் முதலிடம் வகிக்கிறது. ஆனால் வாரியம் இப்போது விதிகளை மாற்றி விட்டு, எங்களதுபோட்டியாளருக்குச் சாதகமாக முடிவு எடுத்துள்ளது. வேறு வழியின்றி நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்என்றார்.
ஈ.எஸ்.பி.என். சாப்ட்வேர் நிறுவனத்தின் மேலாளர் வெங்கடேஷ் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைஒளிபரப்புவதில் அனுபவமற்ற ஜீ டிவி நிறுவனம், ஒளிபரப்பு உரிமையை பெறுவதற்கான தகுதியைப் பெறவில்லை.ஆனால் கிரிக்கெட் வாரியம் விதிமுறைகளை மாற்றி, அந் நிறுவனத்திற்கு உரிமை வழங்க முடிவெடுத்துள்ளதுஎன்றார்.
இந் நிலையில் ஈ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்ந்த வழக்கு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜீ டிவிக்கு ஒளிபரப்பு உரிமையை வழங்கியது தொடர்பானஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உத்தரவிட்டனர். பின்பு வழக்கை வரும் 9ம் தேதிக்குஒத்திவைத்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications