For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலட்சுமியின் சொத்துக்கள்: டிஜிபிக்கு கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Jayalakshmiஜெயலட்சுமியின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழககாவல்துறை தலைவருக்கு, ஜெயலட்சுமியைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவை நகைப்பட்டறை அதிபர் முருகவேலின் தாயார் முத்துலட்சுமி கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜெயலட்சுமி விவகாரம் விஸ்வரூபமெடுத்ததைத் தொடர்ந்து, அவரைக் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்மதுரை திடீர் நகர் இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மைத்துனர் முருகவேல் கைது செய்யப்பட்டார். அவருடன்சேர்த்து 2 போலீஸாரும் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் ஜெயலட்சுமிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் தீவிரமாக இறங்கிய முருகவேல் மற்றும்காவலர்களின் வழக்கறிஞர்கள், தற்போது ஜெயலட்சுமிக்கு எதிரான வழக்குகளை தீவிரப்படுத்த முடிவுசெய்துள்ளனர்.

முதல் கட்டமாக ஜெயலட்சுமி சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் குறித்து விசாரிக்க டிஜிபிக்கு கடிதம் எழுத முடிவுசெய்யப்பட்டுள்ளது. முருகவேலின் தாயார் முத்துலட்சுமி மூலமாத டிஜிபி நடராஜனுக்கு எழுதப்பட்டுள்ள கடிதம்குறித்து முருகவேலின் வழக்கறிஞர் காந்தி கூறியதாவது:

எனது மகன் முருகவேல் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் அனைவர் குறித்தும் தீவிரவிசாரணை நடத்தப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நபர்களில் ஜெயலட்சுமி, அவரது தந்தை அழகிசாமி ஆகியோரிடம்மட்டுமே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மற்ற நபர்களான ஜெயலட்சுமியின் உறவினர்களான நாராயணசாமி,சீனிவாசன், அழகர்சாமி ஆகியோரிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை.

அந்த நபர்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள், ஜெயலட்சுமிக்கு எதிரான சாட்சியங்களை கலைக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளனர். இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும்.

தற்காலிக பணி நீக்கம் நீக்கம் செய்யப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரியின் தூண்டுதலின் பேரில்தான், மற்றகாவல்துறை அதிகாரிகள் மீது ஜெயலட்சுமி புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் காவல்துறைஅதிகாரி, ஜெயலட்சுமியின் தந்தை அழகிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்துதீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஜெயலட்சுமி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது மோசடியான செயல்களின் மூலம்சேர்த்துள்ளார். இதுகுறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாகமுருகவேலின் வழக்கறிஞர் காந்தி கூறியுள்ளார்.

இதற்கிடையே ஜெயலட்சுமி மீது 3க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளைப் பதிவு செய்வதில் வெற்றி பெற்றுவிட்டகாவல்துறையினர் அவரைக் கைது செய்வதில் தீவிரமாக உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X