புயல் சின்னம் வலுவிழந்தது; மழை இல்லை
சென்னை:
ஆந்திர மாநிலத்திற்கு அருகே வங்கக் கடலில் உருவாகியிருந்த புயல் சின்னம் வலுவிழந்தது. இதனால்தமிழகத்தில் கன மழை பெய்யும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்திற்குள்ளானது.
ஆந்திரா அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் (புயல் சின்னம்) உருவாகியிருந்தது. இது கடந்த2 நாட்களாக அதே இடத்தில் நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திரமாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருந்தது.
மழையைப் பார்த்து வெகு நாட்களாகி விட்ட சென்னை உள்ளிட்ட தமிழக மக்களும் கன மழையை எதிர்பார்த்துஆவலுடன் இருந்தனர். ஆனால் தற்போது புயல் சின்னம் வலுவிழந்து விட்டதால் கன மழைக்கு வாய்ப்பில்லைஎன்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் லேசான தூறலுக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில்ஆங்காங்கே லேசான மழை இருக்கலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications