என்னால் தான் வந்தது சேது சமுத்திர திட்டம்: ஜெ
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு என்னுடைய முயற்சிதான் முக்கியகாரணம், இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட யாரும் உரிமை கோர முடியாது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சேது சமுத்திரத் திட்டத்தில் வைகோ உரிமை கொண்டாடுவது விந்தையாக இருக்கிறது. பல்வேறு காலக்கட்டங்களில் நானும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் இத் திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம்பலமுறை வலியுறுத்தி வந்தோம்.
1998ம் ஆண்டு பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக இருந்தபோது, இது குறித்து செயல்திட்டம்வகுப்பதற்காக ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நான் மட்டும் கலந்துகொண்டேன். கூட்டணியில் அங்கம் வகித்த வைகோவுக்கும், பாமகவும் அழைப்பே அனுப்பப்படவில்லை.
அழைப்பு இல்லாவிட்டாலும் பாமக நிறுவனர் ராமதாசும், தமிழக ராஜிவ் காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடிராமமூர்த்தியும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர். அவர்களை அப்போதைய பிரதமர் வாஜ்பாயின்இல்லத்திற்குள் நுழைய காவலர்கள் அனுமதிக்கவில்லை. பின்பு எனது வேண்டுகோளின் பேரில் அவர்களைகூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள்.
கூட்டத்தில் கலந்து கொண்டாலும் இறுதி வரை அவர்கள் வாயே திறக்கவில்லை. நான் மட்டுமே சேது சமுத்திரத்திட்டத்திற்கு ஆதரவாக வலிமையான ஆணித்தரமான ஆதாரங்களை ஒன்றரை மணி நேரம் நான்எடுத்துரைத்தேன். எனவே இத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்தற்கு முக்கிய காரணம் நான்மேற்கொண்ட முயற்சிகள் தான் என்பதை என்னால் 100 சதவீதம் அறுதியிட்டுக் கூறமுடியும்.
உண்மை இவ்வாறு இருக்க, சேது சமுத்திரத் திட்டம் அமலாக்கப்படவுள்ளதற்கு நான் தான் காரணம் என்று வைகோகூறிக் கொள்வது விந்தையாக உள்ளது. வைகோவின் இந்தச் செயல் குழந்தைத்தனமானது என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications