அதிரடிப்படை மீது வீரப்பனின் தங்கை புகார்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்து தகவல் கூறும்படி அதிரடிப்படையினர் தனது குடும்பத்தினரை அடித்துத்துன்புறுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் வீரப்பனின் தங்கை போலீஸில் மனு கொடுத்துள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பனின் உடன் பிறந்த சகோதரி முனியம்மாள், தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அருகேகுருக்கலையானூரில் தனது கணவர் பொன்னுசாமியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு முருகேசன் என்றமகனும், குப்பம்மாள் என்ற மகளும் உள்ளனர். முனியம்மாளின் சித்தி மகள் மாரக்காளின் பெண் கணேசாமஞ்சாரப்பட்டி கிராமத்தில் தனது கணவர் மாதையனுடன் வசித்து வருகிறார்.

இவர்கள் அனைவரும் வீரப்பனின் உறவினர்கள் என்பதால் அதிரடிப்படை போலீசார் அடிக்கடி வந்து, வீரப்பனின்இருப்பிடத்தைக் கேட்டு அடித்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் முனியம்மாள், கணேசாஆகியோர் தர்மபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரனை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் முனியம்மாள் கூறியிருப்பதாவது:

அதிரடிப்படையினர் என்னையும் என் மகனையும் அடிக்கடி முகாமிற்கு கூட்டிச் சென்று வீரப்பன் பற்றி தகவல்தரும்படி கூறி அடித்து துன்புறுத்துகிறார்கள். வீரப்பனின் தங்கை என்பதை தவிர நான் வேறு எந்த தவறும்செய்யவில்லை. அவன் காட்டில் எங்கே இருக்கிறான் என்று எனக்கு எப்படித் தெரியும்?.

அதிரடிப்படையினர் தொடந்து இது போல் தொந்தரவு செய்தால் நானும் எனது குடும்பத்தினரும் தற்கொலைசெய்து கொள்வோம். எனவே எங்களுக்கு தக்க பாதுகாப்பு கொடுத்து எங்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

கணேசா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கும் வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு அதிரடிப்படையினர்என் கணவர் மாதையனை கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று, வீரப்பனை பற்றி தகவல் தரக்கூறி 4 நாட்கள்அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் அதேபோல் அவரை அழைத்துச் சென்று துன்புறுத்தினர். இதற்குப் பயந்துஎனது 2 மகன்களும் வெளிமாநிலத்திற்கு கல் உடைக்கும் வேலைக்கு சென்று விட்டனர். எனது கணவரும் வீட்டைவிட்டு வெளியே சென்று 15 நாட்கள் ஆகிறது. அவர் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. அதிரடிப்படையினர்மீது தான் சந்தேகமாக உள்ளது.

எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்ய நேரிடும்என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+