ரசாயான பூச்சு விநாயகர் சிலைகளுக்குத் தடை
சென்னை:
ரசாயனப் பூச்சு கொண்ட பெரிய விநாயகர் சிலைகளை கடல், ஆறு, குளங்களில் கரைக்க சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ரசாயனப் பூச்சு கொண்ட பெரிய விநாயகர் சிலைகளை கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்க எதிர்ப்புதெரிவித்து சென்னையைச் சேர்ந்த இளங்கோவன் என்ற வழக்கறிஞர் பொது நலன் மனுவை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்தார்.
தனது மனுவில், ரசாயனப் பூச்சு கொண்ட பெரிய விநாயகர் சிலைகளை கடல், ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதன் மூலம் நோய் பரவும் ஆபத்தும் உள்ளது. எனவேபெரிய விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை நீதிபதிகள் கற்பகவிநாயகம், அசோக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் கடல்,ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் ரசாயனப்பூச்சு கொண்ட பெரிய விநாயகர் சிலைகளை கரைக்க இடைக்காலத்தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேசமயம், பெரிய விநாயகர் சிலைகளை அடித்து, உடைத்து கரைக்கும் செயல் இந்துக்களின் மனதைப்புண்படுத்தும் விதமாக உள்ளது, இதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், காவல்துறைத் தலைவர்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications