பெங்களூர் வந்து சேர்ந்த ஜெ. வழக்கு ஆவணங்கள்
பெங்களூர் & சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பெங்களூர்கொண்டு வரப்பட்டன.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை தனி நீதிமன்றத்திலிருந்து பெங்களூர் தனிநீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூரில் தனி நீதிமன்றம்ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான ஆவணங்களை பெங்களூர் கொண்டு செல்வதற்காக ஆகஸ்ட் 27ம் தேதி கர்நாடக நீதித்துறைஅதிகாரிகள் 3 பேர் சென்னை வந்தனர். இங்கு வழக்கு ஆவணங்களை சரிபார்த்து வந்த அவர்கள் தங்களதுபணியை நேற்று முன்தினம் முடித்தனர்.
பின்னர் ஆவணங்களை பெங்களூர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளில் கர்நாடக அதிகாரிகள் இறங்கினர்.2,600 ஆவணங்களை பெங்களூர் கொண்டு செல்வதற்காக, தமிழக அரசிடம் கேட்டிருந்த அலுமினியப் பெட்டிகள்வரத் தாமதமானதால், பெரிய அட்டைப் பெட்டிகளை வாங்கி அதில் ஆவணப் புத்தகங்களை அடுக்கினர்.
| மொத்தம் 18 அட்டைப் பெட்டிகளில் இந்த ஆவணங்கள் மற்றும் வழக்கு தொடர்பான 1,600 பொருட்கள்அடுக்கப்பட்டன. பின்னர் பெங்களூரிலிருந்து வந்த லாரி மற்றும் வேனில் இந்த அட்டைப் பெட்டிகள்ஏற்றப்பட்டன. அதன் பின்னர் கொட்டும் மழையில், தமிழக மற்றும் கர்நாடக ஆயுதப் படை போலீஸார்பாதுகாப்புடன் இந்த வாகனங்கள் பெங்களூர் புறப்பட்டுச் சென்றது. இன்று அதிகாலை இந்த ஆவணங்கள்பெங்களூர் வந்தடைந்தன.
இது குறித்து கர்நாடக நீதித்துறை செயலாளர் வேதமூர்த்தி நிருபர்களிடம், ஆவணங்கள் பத்திரமாக பெங்களூர்வந்துவிட்டன. ஆவணங்கள் அடங்கிய பெட்டிகள் மாநகர சிவில் நீதிமன்றப் பதிவாளர் பி.வி. பட்டீலிடம்ஒப்படைக்கப்பட்டன என்றார். ஆவணங்கள் பெங்களூர் சென்றடைந்து விட்டதால் வழக்கு விசாரணை விரைவில் கர்நாடக தனி நீதிமன்றத்தில்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு அரசு தரப்பு வழக்கறிஞரை கர்நாடக அரசு இன்னும்நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications