சுயநிதி பொறியியல் வகுப்புகள்: அக். 1ல் துவக்கம்
சென்னை:
தமிழக சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளின் முதலாமாண்டு வகுப்புகள் அக்டோபர் 1ம் தேதி ஆரம்பிக்கும் எனஅண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களை சிங்கிள் விண்டோ முறையில்நிரப்ப வேண்டியதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று முதல் 12ம் தேதி வரை சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ்சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று அக் கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
இந் நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டுக்கான முதலாமாண்டுசெமஸ்டர் வகுப்புகள் அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கும். முதலாமாண்டு செமஸ்டர் வகுப்புகள் அடுத்தஆண்டு ஜனவரி 13ம் தேதி முடிவடையும்.
முதலாமாண்டு வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடைபெறும். இரண்டாவது செமஸ்டர்வகுப்புகள் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கும்.
முதல் செமஸ்டர் வகுப்புகளை, 540 வகுப்புகள் அல்லது 90 வேலை நாட்கள் கொண்டதாக வரும் வகையில்,சனிக்கிழமைகளும் கூட வகுப்புகளை நடத்த கல்லூரி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்குமாறு அண்ணாபல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஏகப்பட்ட குளறுபடிகளுக்குப் பின் மாணவர் சேர்க்கை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications