காங். தொண்டர்கள் விரட்டிய தியாகிக்கு ஜெ. உதவி
சென்னை:
காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 20 வருடமாக தங்கியிருந்த பழுத்த சுதந்திரப்போராட்ட தியாகியை காங்கிரஸ் தொண்டர்கள் விரட்டியடித்தனர். அவருக்கு முதல்வர் ஜெயலலிதா மாதம் ரூ. 3,000 நிதியுதவியும்,தங்குவதற்கு வீடும் கொடுத்து உதவியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு பிள்ளை. வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு சுதந்திரப்போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்ற சுதந்திரப் போராட்ட தியாகி. தற்போது90 வயதாகும் ராஜு பிள்ளை, தனது 80 வயதுமனைவியுடன் காங்கிரஸ் மைதானத்தில் தங்கியிருந்தார்.
இந் நிலையில், காங்கிரஸ் மைதானத்திலிருந்து காங்கிரஸாரால் வலுக்கட்டாயமாக நானும், எனது மனைவியும் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், இருக்க இடம் இல்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும் நாங்கள் தவிக்கிறோம்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி எங்களது வாழ்க்கை உள்ளது. எனவே குடியிருக்க ஒரு வீடும்,நிதியுதவியும் தந்து உதவ வேண்டும் என்று கோரி ஜெயலலிதாவுக்கு ராஜு பிள்ளை மனு கொடுத்திருந்தார்.
மனுவைப் பரிசீலித்த ஜெயலலிதா, ராஜு பிள்ளை மற்றும் அவரது மனைவிக்கு சென்னை தாதண்டர் நகர் பகுதியில் உள்ள அரசு குடியிருப்புவளாகத்தில் ஒரு வீட்டை ஒதுக்கியும், மாதம் ரூ. 3,000 நிதியுதவி வழங்கியும் உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவையும், காசோலையையும் ராஜு பிள்ளையிடம் ஜெயலலிதா வழங்கினார். முதல்வருக்கு ராஜு பிள்ளை கண்ணீர் மல்கநன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதற்கிடையே, ராஜு பிள்ளையை விரட்டியடித்த காங்கிரஸாரின் செயலுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகஅதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தபால் தலை வெளியிடாமல்இருந்து வரும் வேளையில், திமுக தலைவர் கருணாநிதியின் மருமகன் என்ற ஒரே காரணத்திற்காக முரசொலி மாறனுக்கு நினைவு தபால்தலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் அரசு.
இந்த செயலை பொறுக்க முடியாமல் வெளிப்படையாக தனது எதிர்ப்பை ராஜு பிள்ளை வெளியிட்டதால், அவரை திமுகவினர்தூண்டுதலின் பேரில் காங்கிரஸார் விரட்டியடித்து அவரது தியாகத்தை அவமானப்படுத்தியுள்ளனர். இந்த செயல் கடுமையாகக்கண்டிக்கத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது.
13 பேருக்கு தியாகி பென்ஷன்:
இந் நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 13 பேருக்கு ஓய்வூதியம் வழங்க முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் கஸ்பா ஏ ஆம்பூரைச் சேர்ந்த சீனிவாசலு, கோயம்புத்தூர் மாவட்டம், கண்ணம்பாளையத்தைச்சேர்ந்த கருப்பண்ணன், காஞ்சீபுரம் மாவட்டம், பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த கணேசன் நாயுடு, தேனிமாவட்டம், குப்பி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஏ.வி.ராமசாமி,
சேலம் மாவட்டம் ஜாகீர் காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இராமகவுண்டர், திருச்சிராப்பள்ளி மாவட்டம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த நாகமலை, நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிள்ளை,கொடுவிலார் பட்டியைச் சேர்ந்த ஏ.மாரி முத்துச்சாமி, கூடலூரைச் சேர்ந்த கனகராஜ்,
அல்லி நகரத் தைச் சேர்ந்த லட்சுமணன், போடிநாயக்கனூரைச் சேர்ந்த இராமலிங்கம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தபி.பி.ராமசாமி நாயுடு, சில்லமரத்துப் பட்டியைச் சேர்ந்த சீனியப்பன் ஆகிய 13 விடுதலைப் போராட்ட வீரர்கள், பலஆண்டுகளாக கோரிக்கை மனுக்கள் கொடுத்த போதும் தங்களுக்கு மாநில அரசின் சுதந்திரப் போராட்ட வீரர்ஒய்வூதியம் வழங்கப்படவில்லை என்றும் மாநில அரசின் விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வு ஊதியத்தைதங்களுக்கு வழங்கி உதவிட வேண்டும் என்றும் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இந்த மனுக்களைப் பரிசீலனை செய்த முதல்வர் ஜெயலலிதா இவர்களது தியாகத்தைப் போற்றும் வகையில் மாநிலஅரசின் விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வு ஊதியத்தை உடனடியாக வழங்க உத்தரவிட்டார். இதன்படிஇவர்களுக்கு ஓய்வு ஊதியமாக மாதம் 3,000 ரூபாயும், மருத்துவப்படியாக மாதம் 15 ரூபாயும் அவர்களதுவாழ்நாள் வரை வழங்கப்படும்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரங்கநாயகி, மதுரை மாநகர் மேலமாசி வீதியைச் சேர்ந்த பார்வதி அம்மாள்ஆகியோர் மறைந்த தங்களது கணவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள், எனவே தங்களுக்கு மாநில அரசுவிடுதலைப் போராட்ட வீரர் குடும்ப ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் மனுஅளித்திருந்தனர்.
இந்த மனுக்களை பரிசீலித்த ஜெயலலிதா இருவருக்கும் மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர் குடும்ப ஓய்வுஊதியம் வழங்க உத்தரவிட்டார். அதன்படி மாதம் ஒன்றிற்கு 1,500 ரூபாய் குடும்ப ஓய்வுதியமும், மருத்துவப்படியாக மாதம் 15 ரூபாயும் அவர்களது வாழ்நாள் வரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அண்ணா பிறந்த நாள்:
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 96வது பிறந்த நாளையொட்டி வரும் 15ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ளஅண்ணா சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.
இதுதொடர்பாக அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
அண்ணாவின் 96வது பிறந்த நாளாகிய செப்டம்பர் 15ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்குகழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள், கழகநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள்.
கட்சியின் அனைத்துப் பிரிவுகள், அணிகள், கழக உடன் பிறப்புகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அண்ணாவுக்கு மரியாதை செய்யவேண்டும் என்று அதிமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications