கர்நாடக சினிமா விவகாரம்: தரம்சிங்-ரெட்டி பேச்சு
சென்னை:
கர்நாடகத்தில் கன்னடம் அல்லாத பிற மொழித் திரைப்படங்களை திரையிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகுறித்து அம் மாநில முதல்வர் தரம்சிங்குடன் பேச்சு நடத்தியுள்ளதாக மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர்ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார்.
கன்னட மொழி அல்லாத பிற மொழிப் படங்கள், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் திரையிட்ட 7 வாரங்களுக்குப் பிறகேகர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்று அம் மாநிலத் திரையுலகினர் நடிகர் ராஜ்குமார் தலைமையில் கோரிக்கைவைத்தனர். இதை ஏற்று மாநில அரசு பிற மொழிப் படங்களுக்கு இந்த 7 வார நிபந்தனையை விதித்தது.
இதற்கு கர்நாடக திரைப்பட வினியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கன்னடப் படங்களுக்கு சரியான வரவேற்பு இல்லாததால் கர்நாடகத்தில் பிற மொழிப் படங்களை நம்பித்தான்தியேட்டர்களே உள்ளன.
குறிப்பாக தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்குப் படங்கள் தான் பெரும்பாலான தியேட்டர்களில் ஓட்டப்படுகின்றன.
இந் நிலையில் புதிய படங்களை ரிலீஸ் செய்ய தடை விதித்ததைக் கண்டித்து தியேட்டர்களை மூடி போராட்டம்நடத்தி வருகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள். இதனால் கன்னடப் படங்களும் ரிலீஸ் செய்யப்படவில்லை.
இந் நிலையில் சென்னையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தஜெயபால் ரெட்டி பேசுகையில்,
கர்நாடகத்தில் கன்னட மொழி அல்லாத பிற மொழிப் படங்களை திரையிடுவதற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்துஅம் மாநிநல முதல்வர் தரம்சிங்குடன் பேசியுள்ளேன். அதே போல பிற மொழிப் படங்களுக்கு அதிகமானகேளிக்கை வரி விதிக்கப்படுவது குறித்தும் பேசினேன். விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்என்றார்.












Click it and Unblock the Notifications