தனி விமானத்தில் லண்டன் செல்ல ஜெ. திட்டம்?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ள திட்டத்தில் மாற்றம் வரலாம் என்றுதெரிகிறது.
நாளை மறுதினம் (12ம் தேதி) அவர் லண்டன் புறப்படுவார் என்று கூறப்பட்டது. பொறுப்புமுதல்வராக பணிவு புகழ் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முதுகு வலி, மூட்டு வலியோடு உடல் எடை குறைப்பு உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக அமெரிக்காஅல்லது லண்டன் செல்ல முடிவு செய்திருந்த முதல்வருக்கு வெளிநாட்டு மருத்துவர்கள்சென்னையில் வைத்தே பரிசோதனைகளை முடித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அடுத்தகட்ட சிகிச்சையை லண்டனில் வைத்துக் கொள்வது என்று முடிவானது. 12 அல்லது 15ம் தேதிசசிகலா உள்ளிட்ட பதினாறு பேருடன் அவர் லண்டன் செல்வார் என்று தகவல்கள் வந்தன.
ஆனால், இப்போது லண்டனைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபர்களான பிரபல சகோதரர்களுக்குச்சொந்தமான தனி விமானத்தை இதற்காக ஜெயலலிதா பயன்படுத்த விரும்புவதாகவும், அதற்குமத்திய அரசிடம் இருந்து இன்னும் க்ரீன் சிக்னல் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
முதலில் செலவுக்கு மிக அதிகமான அன்னிய செலாவணி கேட்டது, அதிகம் பேருக்கு 2 மாத விசாகேட்டது போன்ற பிரச்சனைகளால் பயணம் தள்ளிப் போனது. அந்த விவகாரங்கள்வந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில் விமானப் பிரச்சனை எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
லண்டன் செல்லும் முன் விமானத்துக்கு இரு நாடுகளில் எரிபொருள் நிரப்ப வேண்டியிருக்கும்.அதற்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறு மீண்டும் வெளியுறவுத்துறையை தமிழக அரசுநாடியிருப்பதாகத் தெரிகிறது.
ஜெயலலிதாவின் இந்தப் பயணத்தையொட்டி எப்போது வேண்டுமானாலும் பொறுப்பு முதல்வர்குறித்த அறிவிப்பு வரலாம் என்பதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடந்த சில நாட்களாகசொந்த ஊர் செல்லும் திட்டங்களை ஒத்தி வைத்துவிட்டு சென்னையிலேயே தங்கியிருக்கின்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications