நக்ஸலைட் அமைப்புக்கு தமிழக அரசு தடை
சென்னை:
மக்கள் யுத்தக் குழு என்று அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சிக்கு தமிழகத்தில்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மக்கள் போர்க் குழு உறுப்பினர்கள் சட்ட விரோதமான புத்தகங்கள், போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள்மூலம் அரசுக்கு எதிராக மக்களை வன்முறைப் பாதையில் திருப்ப முயல்கின்றனர். இவர்கள் மீது ஆயுதங்களைவைத்திருத்தல், கடத்தல், குண்டு வெடிப்பு தொடர்பான வழக்குகள் பல பதிவு செய்யப்பட்டுள்ளன.
மக்கள் போர்க் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் ஆயுதப் புரட்சியில்ஈடுபடுவதற்காக பயிற்சி மேற்கொண்டுள்ளதாக உளவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் மக்கள் போர்க் குழு அமைப்பை அப்போதையமத்திய அரசு தடை செய்தது. அதேபோல் மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த அமைப்பிற்கு ஆந்திர அரசும்தடை விதித்தது. ஆனால் ஜூலை மாதத்துடன் இந்தத் தடை முடிவடைந்த நிலையில் ஆந்திர அரசு அதனை நீட்டித்துஉத்தரவிடவில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பொடா சட்டத்தின் கீழ் இந்த அமைப்பை மத்திய அரசு தடை செய்திருந்ததால்,தமிழக அரசு தனியாகத் தடை எதுவும் விதிக்கவில்லை. ஆனால் பொடா சட்டம் தற்போது திரும்பப் பெறப்படும்நிலை உள்ளதால் கிரிமினல் சட்டத்தின் கீழ் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
மக்கள் போர்க் குழு அமைப்பின் மீதான தடையை ஆந்திர அரசு நீக்கியதற்கு சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாகண்டனம் தெரிவித்திருந்தது நினைவுகூறத்தக்கது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications