காலையில் "சுள்" வெயில், மாலையில் கன மழை!
சென்னை:
சென்னை நகரில் நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று காலை நல்ல வெயில் அடித்தது. ஆனால் மாலையில் கனமழை பெய்து சென்னை மக்களை குஷிப்படுத்தியது.
வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த நான்கு நாட்களாகவெயில் குறைந்து நல்ல மழை பெய்து வந்தது. இருப்பினும் புயல் சின்னம் வலுவிழுந்ததால், மழை நின்றது.
நேற்று காலை முதல் வழக்கம் போல சுள்ளென்று வெயில் அடிக்க ஆரம்பித்தது. மழை அவ்வளவுதானா என்றுமக்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் பிற்பகலுக்கு மேல் நிலைமை மாறியது.
மாலை 3 மணிக்கு சென்னையின் பல பகுதிகளிலும் கன மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. அதன் பிறகு நின்ற மழை பின்னர் இரவு 8 மணிக்கு மேல் மீண்டும் தொடர்ந்தது. இரவு முழுவதும்நல்ல மழை பெய்ததால் சென்னை நகர் மீண்டும் குளுமை அடைந்தது.
இன்றும் மாலையில் மழை பெய்யலாம் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications