திருப்பதிக்கு பாதி விலையில் சந்தன கட்டை: ஜெ
திருப்பதி:
திருமலை திருப்பதி கோவிலுக்கு சந்தனக் கட்டைகளை பாதி விலையில் வழங்க தமிழக முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இக் கோவிலுக்குத் தேவையான சந்தனக் கட்டைகள் தமிழகத்தில் இருந்து தான் வாங்கப்படுகின்றன.தமிழக அரசின் வனத்துறை இதனை விற்று வருகிறது.
இந் நிலையில் இந்தக் கட்டைகளை இலவசமாக வழங்க முன் வர வேண்டும் என முதல்வர்ஜெயலலிதாவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடிதம் எழுதியது. இதையடுத்து தேவஸ்தானஅதிகாரியையும் வனத்துறையினரையும் அழைத்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
அப்போது பல கோவில்களுக்கும் தமிழகத்தில் இருந்து சந்தனக் கட்டைகள் விற்கப்பட்டு வரும்நிலையில் திருப்பதிக்கு மட்டும் இலவசமாகத் தருவது சரி வராது என்று கூறிய ஜெயலலிதா,வேண்டுமானால் பாதி விலைக்குத் தருவதாகத் தெரிவித்தார்.
இதன்படி திருப்பதி கோவிலுக்கு ஆண்டுதோறும் தேவைப்படும் ரூ. 30 லட்சம் பெறுமானமுள்ளஒன்றரை டன் சந்தனக் கட்டைகளை தமிழக அரசு இனி ரூ. 15 லட்சத்துக்கு வழங்கும்.
இதற்காக தமிழக முதல்வருக்கு தேவஸ்தானத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பிறந்த நாள்: ஜெ. மாலை அணிவிப்பு
இதற்கிடையே தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 96வது பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 15ம்தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரதுசிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவிப்பார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் நேரில் பங்கேற்பதை ஜெயலலிதா தவிர்த்து வந்ததுகுறிப்பிடத்தகது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications