பாப்பாபட்டி தேர்தல்: திருமாவளவன் எதிர்ப்பு
மதுரை:
மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்தியும் மக்களுக்குப் பலன் இல்லாமல் போய் விட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டிபஞ்சாயத்துக்களுக்கு மறுபடியும் தேர்தல் நடத்துவதால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை என்றுவிடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துக்களில் நிலவும்அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்காமல், அங்கு மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்துவதால் ஒரு பலனும் இல்லை.
இந்த பஞ்சாயத்துக்களில் கடந்த முறை நடந்த தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சுப்பன் மற்றும்பூங்கொடியன் ஆகியோரை நிறுத்தினோம். அவர்களால் இன்னும் அந்த கிராமங்களுக்குள் நுழைய முடியவில்லை.2 ஆண்டுகளாக அவர்கள் வெளியூரில் வசிக்க வேண்டிய அவலம் நிலவுகிறது.
இந்த பஞ்சாயத்துக்களில் வேட்பு மனு தாக்கல் செய்வோரின் நிலையும் இப்படித்தான் இருக்கும். முதலில் இந்தநிலையை மாற்ற வேண்டும். எனவே பாப்பாபட்டி, கீரிப்பட்டி தலித் பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடத்துவதைதள்ளிப்போடக் கோரி செப்டம்பர் 30ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்அவர்.
சர்ச்சைக்குரிய பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் தலித் பஞ்சாயத்துக்களில் கடந்த 1996ம் ஆண்டு முதல்இதுவரை பஞ்சாயத்துத் தலைவராக யாரும் தேர்ந்தெடுக்கப்பட முடியாத சூழ்நிலை நிலவுகிறது. தேர்தல் நடந்துதலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பஞ்சாயத்துத் தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும், அடுத்த நாளே அவர்கள்ராஜினாமா செய்து விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications