சிலை கரைப்பு: அப்பீல் செய்கிறது இந்து முன்னணி
ராமேஸ்வரம்:
ரசாயானப் பூச்சு அடங்கிய பெரிய விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கக் கூடாது என்று சென்னைஉயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இந்து முன்னணி அமைப்பு முடிவுசெய்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியின்போது, ரசாயனப் பூச்சு கொண்ட விநாயகர் சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரீஸில்செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பெயிண்ட் அடிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் உள்ளிட்டவற்றை கடல்உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகஅவர் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி வந்தால் மட்டும் தமிழகத்தில் பலருக்கு சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், மாசுகட்டுப்பாடு குறித்தும் கவலை வருவது ஏன் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் உள்ள பல்வேறு தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால் கடலும், குடிநீர்நிலைகளும் மாசுபட்டு மக்கள் அவதிப்படுவது இவர்கள் கண்களுக்கு ஏன் தெரிவதில்லை? விநாயகர் சதுர்த்திமட்டும்தான் இவர்களுக்கு தெரியுமா?
பெரிய பெரிய விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் வைபவத்தை பல காலமாக நடத்தி வரும் மும்பை,ஹைதராபாத் போன்ற நகரங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. கொல்கத்தாவிலும் துர்காபூஜையின்போது இதுபோன்ற கூக்குரல்கள் எழுவதில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் இதுபோன்றபிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. காரணம், இது தி.க., திமுக தோன்றிய பூமி. அதனால்தான் இத்தனைபிரச்சினைகளும்.
சென்னை நகரில் 5,000 சிலைகளையும், தமிழகம் முழுவதிலும் 25,000 சிலைகளையும் நிறுவ முடிவுசெய்துள்ளோம். இந்த சிலைகளை வேதிப்பொருள் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களால்தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.
தியாகராய நகரில் கொண்டக் கடலையால் ஆன விநாயகரை தயாரிக்கவுள்ளோம். இதை கடலில் கரைத்தால்,மீன்களுக்கு நல்ல இரையாகும். மெரீனா கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதித்திருப்பதைவன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார் அவர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications