கருணாநிதி படத்தில் நடிக்க அபிதாவுக்குத் தடை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி 8 ஆண்டுகளுக்குப் பிறகு கதை, வசனம் எழுதும் கண்ணம்மா படத்தில் நடிக்க நடிகை அபிதாவுக்கு, தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
கண்ணம்மா படத்தில் டிவி நடிகர்களான வெங்கட், பிரேம்குமார் மற்றும் நடிகை அபிதா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இதற்கான பூஜைஏவி.எம். ஸ்டுடியோவில் சமீபத்தில் நடந்தது.
இந் நிலையில் இப்படத்தில் நடிக்க அபிதாவுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின்துணைத் தலைவர் கே.ராஜன் கூறுகையில்,
இயக்குனர் புகழேந்தி உள்ளக் கடத்தல் என்ற படத்தை இயக்கி வருகிறார். அவர் தயாரிப்பாளர் கவுன்சிலில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், தனது படத்தில் நடிக்க அபிதா ஒத்துக் கொண்டு கால்ஷீட் கொடுத்ததாகவும், ஆனால் 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு பின்னர் வர மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அபிதாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தன்னால் உள்ளக் கடத்தல் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். மேலும், இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறிவிட்டார்.
இதையடுத்து எந்தப் படத்திலும் நடிக்க அபிதாவை தயாரிப்பாளர்கள் அணுகக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவேகலைஞரின் கண்ணம்மா படத்திலும் அபிதா நிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளருக்கும்அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ராஜன்.
சேது படத்துக்குப் பின் பல தமிழ்ப் பட வாய்ப்புக்கள் அபிதாவுக்கு வந்தன. கேரளத்தைச் சேர்ந்தவரான அபிதா, அதற்கு முன்மலையாளத்தில் பல சூடான படங்களில் நடித்திருந்தார். சேதுவின் வெற்றிக்குப் பின் அந்த பிட் படங்கள் தமிழுக்கு வரிசையாய்படையெடுக்க, சேதுவில் கிடைத்த நல்ல பெயரை அபிதா இழந்தார். இதனால் அவரைத் தேடிப் போனவாய்ப்புக்களும் பறிபோய்விட்டன.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய மாபெரும் மாஸ்டர் பிளான்! செங்கற்களில் ஒரு சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications