திருச்செந்தூரில் ஆவணி தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் தேரோட்டம் இன்று காலை சிறப்பாகநடைபெற்றது.
திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்களும்அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டன. 10-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.
முதலில் அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி தேர் 6.20மணிக்கு இழுக்கப்பட்டு, 4 வீதிகளிலும் வலம் வந்து 7.35 மணிக்கு நிலையை அடைந்தது.
அதேபோல் அம்மன் தேர் காலை 7.40 மணிக்கு இழுக்கப்பட்டு, 8.25 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இந்தத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர்.
தேரோட்டத்தை ஒட்டி பலத்த பாதுகாப்புக்கு காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.












Click it and Unblock the Notifications