சிபிஐயிடம் வழக்கு ஒப்படைப்பு
சென்னை & மதுரை:
ஜெயலட்சுமி விவகாரம் தொடர்பான வழக்கு தமிழக போலீசாரால் இன்று முறைப்படி சிபிஐயிடம்ஒப்படைக்கப்பட்டது.
சென்னை சிபிஐ அலுவலகத்தில் இந்த வழக்கும் நீதிமன்ற உத்தரவும் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்தவழக்கை விசாரிக்க அடுத்த சில நாட்களில் துணை இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரியை சிபிஐ நியமிக்கும்.இதையடுத்து அவர் மதுரையில் முகாமிட்டு விசாரணையைத் தொடங்குவார் என்று தெரிகிறது.
மதுரையில் சிபிஐக்கென அலுவலகம் ஏதும் இல்லை. 1994ல் இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலைவழக்கையும், 1996ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குண்டு வெடிப்பு வழக்கிலும் சிபிஐ விசாரணைநடந்தபோது மதுரையில் தற்காலிகமாக சிபிஐ அலுவலகம் அமைக்கப்பட்டது.
அதே போல தற்போதும் ஜெயலட்சுமி வழக்கை விசாரிப்பதற்கும் மாநில போலீஸார் உதவியுடன் தற்காலிமாக ஒருசிபிஐ அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.
அரவக்குறிச்சியிலும்...
இதற்கிடையே ஜெயலட்சுமி மீது அரவக்குறிச்சியிலும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிபிஐ அதிகாரிகள்அங்கும் விசாரணை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேல் அரவக்குறிச்சியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது, ஜெயலட்சுமியுடன்தோகைமலையில் தங்கியிருந்தாகவும், அரவக்குறிச்சி நகைக்கடையில் நகை வாங்கி விட்டு, அவர் பணம் பாக்கிவைத்ததாகவும் அரவக்குறிச்சி போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
ஜெயலட்சுமி வழக்கு இப்போது சிபிஐக்கு மாற்றப்பட்டதால், சிபிஐ அதிகாரிகள் அரவக்குறிச்சியிலும்விசாரணையில் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது. இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு தற்போது அரியலூரில்பணிபுரிவதால் அங்கும் சிபிஐ விசாரணை இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications