திரையுலகினருடன் இனி மோதல் இல்லை: ராமதாஸ்
சேலம்:
எங்களுக்கு நிறைய வேலைகள் இருப்பதால் திரைப்படத் துறையினருடன் இனி மோதல் எதுவும் கிடையாது என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
ஏற்காட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
திரைப்படத்துறையினருடனான பிரச்சினை முடிந்துவிட்டது. அதைப்பற்றி இனி பேச வேண்டாம்.
சினிமா என்பது சிறந்த ஊடகம். அதைப் பயன்படுத்தி சமுதாயத்தையும், இளைஞர்களையும் நல்வழிப்படுத்தவேண்டும் என்பதே பாமகவின் நோக்கம். இளைஞர்கள் தீயவழியில் செல்வதற்கு சினிமா தூண்டுகோலாகஇருக்கக்கூடாது என்று நாங்கள் நினைத்தோம். இதனால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகிவிட்டன.
இனி அவர்களின் நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட மாட்டோம். ஏனென்றால் எங்களுக்கு நிறைய வேலைகள்உள்ளன. படங்கள் வெளியிடுவதைத் தடுப்பது உள்ளிட்டவற்றில் இனி எங்கள் கட்சியினர் ஈடுபட மாட்டார்கள்.நீங்களும் இந்த செய்தியைப் பெரிதாக்க வேண்டாம். நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
சேது சமுத்திரத் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாடமுடியாது. இது மக்களுக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள்குழுவில் ப.சிதம்பரமும் தயாநிதி மாறனும் இடம் பெற்றுள்ளார்கள். இதனால் நிச்சயம் நல்ல முடிவுஎடுக்கப்படும்.
பா.ம.கவில் இனி மாவட்டச் செயலாளர் பதவிகளில் 3ல் ஒரு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்படும்.மத்தியில் உள்ள 12 அமைச்சர்களையும் பயன்படுத்தி மாநிலத்துக்கு அதிக திட்டங்களைப் பெறமுதல்வர் ஜெயலலிதா முன் வர வேண்டும். ஆனால், அவருக்கு அந்த மனம் இல்லை. இதனால்பேசாமல் அவர் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications