என் இலக்கு தமிழர் நலன்: ஜெயலலிதா
சென்னை:
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்க் கட்சித்தலைவர்களை மறைமுகமாக மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார். குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி மீது கடும்தாக்குதல் தொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
செப்டம்பர் 15. உலகம் கண்ட ஒப்பற்ற அறிஞர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்.ஆண்டுக்கு 356 நாட்கள் உண்டு என்றாலும், புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த அந்த செப்டம்பர்திருநாளுக்கு இணைதான் ஏது?
அண்ணாவின் திருவுருவை இதயத்தில் தாங்கி, அவரது புகழை தரணிக்கே பறைசாற்றிய புரட்சித் தலைவர்எம்ஜிஆரின் வழியில் வந்த நமக்கு, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் தகது வேறு எவரைக்காட்டிலும் அதிகமுண்டு.
இன்று அண்ணாவின் தம்பிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் சிலர் அவர் வலியுறுத்திச் சென்ற சமத்துவம்,சம தர்மத்தை பின்பற்றுகிறார்களா?. பின்பற்றுகிறார்கள்- தங்கள் குடும்பங்களில் மட்டும்.
அதே நேரத்தில் இவர்கள் சமத்துவத்தையும் சம தர்மத்தையும் மக்களுக்கு உபதேசிக்காத மேடையில்லை,நாளில்லை. இவர்கள் ஊருக்கு உபதேசிகள்.
ஆனால், நான் சமத்துவத்தையும் சம தர்மத்தையும் சாதித்தே தீருவது என்று உறுதி பூண்டிருக்கிறேன், சாதித்தும்வருகிறேன் என்பதை என் அன்பு உடன்பிறப்புக்கள் அறிவார்கள். சாதி, மதசார்பின்மையின்றி அனைவரையும் சமநிலையில் வைத்து கலவரமற்ற அமைதிப் பூங்காவாக தமிழகத்தை முன்னேற்றி வருகிறது அதிமுக அரசு.
இதைக் கண்டு சில பகை மனிதர்கள், என்னையும் கழகத்தையும் மக்கள் பாராட்டுகிறார்களே என்ற பொறாமையில்புழுங்கிப் போய், என்னென்ன தீமை இழைக்கலாம், யாரோடு சேர்ந்து இடர் விளைவிக்கலாம் என்று நாளொருதீமையும் பொழுதொரு சூதும் செய்து வருகிறார்கள்.
அந்த மட்டமான மனிதர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அறிந்தால் மட்டும் போதாது, அவர்களைமக்களுக்கும் அடையாளம் காட்ட வேண்டும். இது அண்ணாவின் தீர்ப்பு.
ஆட்சித் தேரை இலக்கு நோக்கி செலுத்துவதில் என் ஆற்றல் முழுவதையும் செலவிட விடாமல் என் கவனத்தைதிசை திருப்ப முயலும் இந்த மகா மட்டமான மனிதர்களை நான் பொருட்படுத்துவதில்லை. என் இலக்கு தமிழர்நலன் தான். என் வழி அண்ணா வழி.
எத்தனை சோதனைகள் வந்தாலும் இந்த லட்சிய பயணம் தொடரும். மக்கள் என் மீது வைத்துள்ள பாசமும்விசுவாசமுமே என் மகத்தான ஆயுதங்கள்.
நமது வெற்றிப் பயணம் தொடர அண்ணா பிறந்த நாளில் உறுதி ஏற்போம். அண்ணா வழியில் நடப்போம்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாகவே அண்ணா பிறந்த நாளன்று அமைச்சர்களை விட்டே அவரது சிலைக்கு மாலைஅணிவிக்கச் செய்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த ஆண்டு தானே மாலை அணிவிக்க முடிவு செய்துள்ளார்.
கைத்தறிக்கு கூடுதல் தள்ளுபடி:
இதற்கிடையே அண்ணா பிறந்த நாளையொட்டி கைத்தறித் துணிகளுக்கு வழக்கமாக தரப்படும் 20 சதவீததள்ளுபடியுடன் மேலும் 10 சதவீத தள்ளுபடியும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வரும் 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோ ஆப்டெக்ஸ் உள்ளிட்ட அரசின் அனைத்து கைத்தறித் துணி விற்பனைநிலையங்களிலும் இந்த 30 சதவீத தள்ளுபடி விலையில் ஆடைகளை வாங்கலாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications