குடும்ப கட்டுப்பாடு: முஸ்லிம் வாரியம் ஆலோசனை
டெல்லி:
நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை பெருக்கம், முஸ்லீம்களின் மக்கள் தொகை வளர்ச்சி ஆகியவை குறித்துவிவாதிக்க அகில இந்திய இஸ்லாமிய சட்ட வாரியம் முன் வந்துள்ளது.
மேலும் இரு குழந்தைத் திட்டம் குறித்து இஸ்லாமிய மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வது குறித்தும்அந்த வாரியம் விவாதிக்கவுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் தொகை வளர்ச்சி குறித்து மத்திய கணக்கெடுப்பு வாரியம் வெளியிட்டதவறான புள்ளி விவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்சசில் வாரியம் தெரிவித்ததைவிட வளர்ச்சிவிகிதம் குறைவாகவே உள்ளது தெரியவந்தது.
ஆனாலும், மற்ற மதத்தினரை விட சராசரியாக மக்கள் தொகை வளர்ச்சி முஸ்லீம்களிடையே அதிகமாகஇருப்பதால் அதை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி ஆகியவை பிரச்சனையாக்கி வருகின்றன.
இந் நிலையில் இஸ்லாமிய மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கே மக்கள் தொகை இடைஞ்சலாகஇருப்பதால், அதைக் கட்டுப்படுவது குறித்து விவாதிக்க இஸ்லாமி சட்ட வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்த வாரியத்தின் துணைத் தலைவர் மெளலானா சையத் காப்ல் சித்திக் இந்த விவாதத்துக்கு அழைப்புவிடுத்துள்ளார். ஆனால், அவரது இந்த யோசனைக்கு வாரியத்தின் சில உறுப்பினர்களிடையே எதிர்ப்புதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முஸ்லீம் மக்கள் தொகை வளர்ச்சி குறித்து தவறான தகவல் தரப்பட்டது குறித்து விசாரணைக்குமத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் முன்பு ஆட்சியில் இருந்த பா.ஜ.கவின் தலையீடு இருந்ததா என்றும் விசாரிக்க உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications