கிருஷ்ணா.. கிருஷ்ணா: ஜெ. கதறுகிறார்: ராமதாஸ்
திருநெல்வேலி:
வீராணம் திட்டத்தில் ஆயிரம் கோடியை வீணடித்துவிட்டு இப்போது கிருஷ்ணா, கிருஷ்ணா என நதி நீர் கேட்டுஆந்திராவை நோக்கி முதல்வர் ஜெயலலிதா கதறுவதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
நெல்லையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சேது சமுத்திரத் திட்டம் என்னால் தான் வந்தது என்று முதல்வர் ஜெயலலிதா சொல்வது சுத்தமான பித்தலாட்டம்.1998ல் அதிமுக ஆதரவோடு வாஜ்பாய் ஆட்சி அமைந்தபோதும், 1999ல் திமுக ஆதரவில் வாஜ்பாய் ஆட்சிஅமைந்தபோதும் இந்தக் கோரிக்கையை நேஷனல் அஜெண்டாவில் சேர்க்கவே சொல்லவில்லை ஜெயலலிதா.
அதைச் சொன்னது வைகோ, நான், மாறன் ஆகியோர் தான். சரி, மன்மோகன் சிங்கையாவது சந்தித்து சேதுசமுத்திரத் திட்டத்துக்காக பேசினாரா? அதுவும் இல்லை. எதையுமே செல்லாமல் ஹிட்லர் பாணியில் நான்சொல்வதே உண்மை என்று திரும்பத் திரும்ப பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
விட்டால், ரூ. 1,000 கோடியில் சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கூட தன்னால் தான் வந்தது என்பார்.வீராணத்தில் வெட்டியாய் ஆயிரம் கோடியைவிட்டுவிட்டு இப்போது கிருஷ்ணா, கிருஷ்ணா என்று தண்ணீர் கேட்டுகதறுகிறார். புதிய வீராணம் திட்டமே வீணானது என்று எத்தனையோ தடவை ஜெயலலிதாவுக்கு எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அதில் ஆயிரம் கோடி மக்கள் பணம் வீணாக்கப்பட்டுவிட்டது.
சந்திரபாபு நாயுடுவை பிராடு என்று சட்டசபையில் சொன்ன வாயோடு போய் தண்ணீர் கேட்டார், அவர்தரவில்லை.
தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து இப் பகுதியின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும். இதனால் இத் திட்டத்தைஎதிர்ப்பதை அரசு கைவிட வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியை 356யை வைத்து கலைக்கச் சொல்கிறேன். கருணாநிதி தான் வேண்டாம் என்று சொல்லிதடுக்கிறார் என்றார் ராமதாஸ்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications