சென்னையில் நடைபயணம்: வைகோவுக்கு போலீஸ் தடை
சென்னை:
சென்னை நகருக்குள் நடை பயணமாக வர வைகோவுக்கு தடை விதித்துள்ள போலீசார், காரில் செல்லுமாறுஅவரிடம் யோசனை கூறி வருகின்றனர். இதை ஏற்க வைகோ மறுத்துவிட்டார்.
நெல்லையில் தொடங்கி கடந்த 40 நாட்களாக பல்வேறு மாவட்டங்களின் குக்கிராமங்களிலும் நுழைந்து, சுமார்1,000 கி.மீ. தூரம் நடைபயணமாக சென்னையை அடைந்துள்ளார் வைகோ. அவரது இந்த நடை பயணத்துக்குநல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நேற்று தாம்பரம் வந்த அவர் இன்று பரங்கிமலை பட்ரோடு வரை நடக்கிறார். பட்ரோடு கண்டோன்மென்ட்திருமண மண்டபத்தில் இரவு தங்கும் அவர் நாளை காலை கத்திப்பாரா, கிண்டி, ராஜ்பவன், அண்ணாபல்கலைக்கழகம், அடையாறு, ஹல்தா ரோடு வழியாக மந்தைவெளியை அடைகிறார்.
பின்னர் மாலை சாந்தோம், கடற்கரைச் சாலை வழியாக தீவுத் திடலுக்கு வருகிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்கிடையே கிண்டி கத்திப்பாரா வரை வைகோ நடை பயணமாக வரலாம் என்றும், அதற்கு மேல் சென்னைநகருக்குள் அவர் ஆயிரக்கணக்கானோருடன் நடைபயணமாக வந்தால் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படும்என்று கூறியுள்ள காவல்துறை அதற்கு அனுமதி மறுத்துள்ளது.
ஆனால், தமிழகம் முழுவதும் சுமார் 1700 தொண்டர்களுடன் தான் நடை பயணம் வந்தபோது ஒரு இடத்தில் கூடபோக்குவரத்துக்கு இடையூராக இருந்ததில்லை. இரண்டிரண்டு பேராக சாலையோரமாகவே வந்தோம்,கட்டுப்பாட்டுடன் வந்தோம், அதே கட்டுப்பாடு சென்னையிலும் தொடரும் என்று கூறியுள்ள வைகோ, காவல்துறைதனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஆனால், இதை ஏற்க மறுத்துள்ள காவல்துறை காரில் சென்றுவிடும்படி வைகோவிடம் கூறியுள்ளது. இதனால்கடுப்பான வைகோ, தடை விதிக்கப்பட்டால் அதையும் மீறி நடை பயணமாக செல்வேன், வேண்டுமானால் கைதுசெய்து கொள்ளலாம் என்று பதில் தந்துள்ளார்.
இதையடுத்து வைகோவுடன் 20 பேர் மட்டும் நடை பயணமாகச் செல்லலாம் என்றும் அதற்கு மேல் சென்றால்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது. ஆனால், அதையும் வைகோ ஏற்க மறுத்துவிட்டார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!











Click it and Unblock the Notifications