இராக் போர் சட்ட விரோதமானது: கோபி அன்னான்

Subscribe to Oneindia Tamil

ஐக்கிய நாடுகள் சபை:

இராக் மீது அமெரிக்கா நடத்திய போரே சட்ட விரோதமானது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்கோபி அன்னான் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் போரைத் தவிர்க்க கடுமையாக முயன்று தோற்ற அன்னான், இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்தார். ஆனால், இன்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவை மிகக் கடுமையாகத் தாக்கினார். அவர்கூறியதாவது:

ஐ.நாவின் அனுமதியையே பெறாமல் தான் இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. ஐ.நா. சட்டதிட்டங்களின்படி பார்த்தால் இந்தப் போரே சட்ட விரோதமானது. ஐ.நா. பாதுகாப்பு சபை தான் இராக் மீதுநடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையை நெருக்கி, விதிகளை மடக்கி, போரைத் தொடுத்தது அமெரிக்கா.

இப்போது இராக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அங்கு வரும் ஜனவரியில்தேர்தல் நடத்துவதே சாத்தியமில்லை. நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது. இதனால் தேர்தல் நடப்பதுசந்தேகம் தான்.

இராக் போல இன்னொரு போரை இந்த உலகம் சந்திக்கக் கூடாது. இராக்கில் ஐநாவையும் உலக நாடுகளையும் மீறிஒருதலைப்பட்சமாக தாக்குதல் நடந்தது.

இராக் போர் மூலம் ஐநா மட்டுமல்ல அமெரிக்காவும் மற்ற நாடுகளும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்கோபி அன்னான்.

2 அமெரிக்கர்கள் கடத்தல்:

இந் நிலையில் பாக்தாதில் 2 அமெரிக்கர்களும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரும் தீவிரவாதிகளால் இன்றுஅதிகாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

பாக்தாதின் அல்-மன்சூர் பகுதியில் இருந்து அவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கல்ப் சர்வீஸஸ் கம்பெனிஎன்ற கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+