கும்பகோணம்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பைமேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம்இது குறித்து பதில் அளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து விசாரிக்க நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது.
இந் நிலையில் நாடு முழுவதுமே பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்அவினாஷ் என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில்,
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்ததில் 35 குழந்தைகள் பலியானார்கள்.அதனையடுத்து பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு,மாநில அரசுகளை வலியுறுத்தியது. அவை நிறைவேற்றப்படாததால் விபத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
கடந்த 1995ம் ஆண்டு அரியானா மாநிலம் டாப்வாலி என்ற இடத்தில் ஒரு பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்புவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 400 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஜூலை மாதம் கும்பகோணத்தில் நடைபெற்ற தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.
எனவே பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கும் முன், அவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாஎன்பதையும், அவசர காலத்தில் வெளியேற போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, நீதிபதி சின்ஹா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பள்ளிகளின்பாதுகாப்பு குறித்து பதில் அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications