ராணி மேரி கல்லூரி வழக்கு: கோர்ட்டில் ஸ்டாலின் ஆஜர்
சென்னை:
சென்னை ராணி மேரிக் கல்லூரியில் அத்துமீறி நுழைந்தது மற்றும் போலீஸாரை மிரட்டியது தொடர்பாகதொடரப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைக்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் இன்று சென்னைசைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த ஆண்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரிக் கல்லூரியை இடிக்க அரசு முடிவெடுத்ததைஎதிர்த்து மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதனால் கல்லூரிக்குள் யாரையும் அனுமதிக்காமல்போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுகவினர் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளுடன் பேசினர்.இதையடுத்து அவர்களை போலீஸார் அங்கிருந்து வெளியேற்றினர்.
பின்னர் ராணி மேரிக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக ஸ்டாலின் உள்ளிட்ட 15 பேரை போலீஸார் கைதுசெய்தனர். ஸ்டாலினை போலீஸார் கைது செய்தபோது போலீஸாரை அவர் மிரட்டியதாகக் கூறப்பட்டது.இதுதொடர்பாக அவர் மீது கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் இன்று சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது. ஸ்டாலின் உள்ளிட்ட 15 பேரும் அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிமோகன்ராஜ் விசாரணையை அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:
பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது. ராணி மேரி கல்லூரிக்கு நான்சென்றபோது யாரும் என்னைத் தடுக்கவும் இல்லை; கைது செய்யவுமில்லை.
அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டேன். ஒரு நாள் நள்ளிரவில் வேளச்சேரியில் உள்ள என்வீட்டுக்கு வந்த போலீஸார் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து என்னைக் கைது செய்தனர். இதற்கானவீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. வழக்கு விசாரணையின்போது அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.
என் மீது மேம்பால ஊழல் வழக்கு போட்டார்கள். பின்பு பெரம்பூர் பாலம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்தார்கள்.அதெல்லாம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. அதைப் போலத்தான் இந்த வழக்கும். இதையும் சந்திப்பேன் என்று கூறினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications