ஜெயலட்சுமியின் புகார் பச்சைப் பொய்: பன்னீர்செல்வம்
சென்னை:
ஜெயலட்சுமியுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது, அவரை நான் சந்தித்ததே இல்லை என்றுபொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயலட்சுமியுடன் தொடர்பு கொண்டிருந்த காவல்துறைஅதிகாகள் பெயர்கள் முதலில் வெளியாகி தமிழகத்தை கலக்கியது. இப்போது அரசியல்வாதிகள் பெயர்களைஜெயலட்சுமி தனது மதுரை எல்லீஸ் நகர் வீட்டிலிருந்து வெளியிட்டு வருகிறார்.
இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த சமீபத்திய பரபரப்பு பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பருக்காக,முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திடம் சூட்கேஸ்களில் வைத்துப் பணம் கொடுத்ததாகவும், அவரை 3 முறைசந்தித்ததாகவும் கூறியிருந்தார்.
அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ஜெயலட்சுமி இந்தப் பேட்டியை அளித்திருப்பதாக பேச்சுஎழுந்துள்ள நிலையில், ஜெயலட்சுமியின் இந்தப் பேட்டியை பன்னீர்செல்வம் கடுமையாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகாசி ஜெயலட்சுமியின் வழக்கு வெளியே வரும்வரையில் அவரது பெயரைக் கூட நான் கேள்விப்பட்டது இல்லை. அவரை நான் பார்த்ததும் இல்லை. அவர் கூறும்போலீஸ் அதிகாரிகளையும் நான் சந்தித்தது இல்லை.
இது அபாண்டமான, பொய்யான புகார். முதலில், எனது உதவியாளரை மட்டுமே தெரியும், என்னைசந்தித்ததில்லை என்று ஜெயலட்சுமி கூறியிருந்தார். ஆனால் இப்போது எனது பெயரையும் இழுத்திருக்கிறார்.
யாரோ சில விஷம சக்திகளின் உத்தரவுக்கேற்ப, அதிமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறுகூறியுள்ளார் ஜெயலட்சுமி என்று நினைக்கிறேன். நீதிமன்றத்தில் 31 நாட்கள் இந்த வழக்கு விசாரணையில்இருந்தபோது என் மீது எந்தக் குற்றமும் சாட்டாத ஜெயலட்சுமி இப்போது புதுக் கதை விட்டுள்ளார்.
இப்படி அபாண்டமான பொய்யைச் சொல்ல அவருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. கடந்தமூன்றரை ஆண்டுகாலமாக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு நல்லாட்சி நடந்து வருகிறது. யாராலும்எந்தக் குறையும் சொல்ல முடியாத ஆட்சி நடந்து வரும் சூழலில், அரசுக்கும் எனக்கும் கெட்ட பெய் ஏற்படுத்தமுயலும் நாலாந்தர அரசியல்வாதிகளை தமிழக மக்கள் விரைவில் அடையாளம் கண்டுகொள்ளப் போவது உறுதி.
அதிமுக அரசுக்கு எதிராக எழுதுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது இந்தியா டுடே இதழ்.
நா கூசாமல் பொய் சொன்ன ஜெயலட்சுமி, அதை வெளியிட்ட இந்தியா டுடே ஆகியவை மீது சட்டப்பூர்வமானநடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications