திருட்டி விசிடி: நாளை திரையுலகினர் பேரணி
சென்னை :
திருட்டு விசிடியை ஒழிக்கக் கோரி தமிழ்த் திரையுலகினர் நாளை சென்னையில் பேரணி நடத்துகின்றனர்.
சென்னையில் தமிழ்த் திரையுலக சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் நடிகர் சங்கத் தலைவர்விஜயகாந்த், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளிதரன், துணைத் தலைவர் கே.ராஜன்,"பெப்சி தலைவர் விஜயன், இயக்குநர்கள் சங்கச் செயலாளர் ஆர்.சுந்தர்ராஜன், நடிகர்கள் எஸ்.வி.சேகர், சூர்யா,நடிகைகள் மனோரமா, குஷ்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு முரளிதரன் நிருபர்களிடம் கூறியதாவது:
திருட்டு விசிடி தயாரிப்பவர்களையும், விற்பனை செய்பவர்களையும், கேபிள் "டிவியில் புதிய படங்களைவெளியிடுபவர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவர்களுக்கு அதிகபட்சமாக 5ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க வேண்டும்.
திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும். ஆம்னி பஸ்களிலும், அரசுபஸ்களிலும் திருட்டு விசிடி ஒளிபரப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும். திருட்டு விசிடி குறித்து பொதுமக்கள் புகார்தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் மற்றும் ஈ-மெயில் முகவரி வழங்க வேண்டும் என்றகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் திரையுலகத்தின் சார்பில் நாளை சென்னையில் மாபெரும் பேரணிநடத்தப்படுகிறது.
மன்றோ சிலையில் இருந்து காலை 9 மணிக்கு பேரணி புறப்பட்டு, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைசென்றடையும். இப்பேரணியில் ரஜினி, கமல், சூர்யா, விஜய், ஜோதிகா, ஸ்னேகா உட்பட அனைத்து நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என 20,000 பேர் கலந்துகொள்கின்றனர்
.பின்பு திரையுலகப் பிரதிநிதிகள், கோரிக்கை மனுவினை சென்னை கோட்டையில் காலை 11.30 மணிக்கு முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்து வழங்கவுள்ளனர்.
இந்தப் பேரணியையொட்டி நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை திரையரங்குகள் தமிழகம் முழுவதும்மூடப்படுகின்றன. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்று முரளிதரன் தெரிவித்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications