சென்னையில் ஜெயலட்சுமி: தாலியை தர தாய் மறுப்பு
சிவகாசி:
நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக தாலியைக் கழற்றித் தருமாறு சிவகாசி போலீஸார் கேட்டதை ஏற்கஜெயலட்சுமியின் தாயார் திருவேங்கடத்தம்மாள் மறுத்து விட்டார்.
ஜெயலட்சுமியின் தந்தை அழகர்சாமி சிவகாசி காவல் நிலையத்தில் கொடுத்த ஒரு புகாரில், சப் இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைக் கடை உரிமையாளர் முருகவேல் ஆகியோர் தனது மனைவிதிருவேங்கடத்தம்மாள், மகன் சீனிவாசன் மற்றும் ஜெயலட்சுமியின் குழந்தை ஆகியோரை கடத்தியதாக புகார்கூறியிருந்தார்.
இதுதொடர்பாக ஷாஜகான், கண்ணன், முருகவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.அழகர்சாமி கூறியிருந்த புகாரில், திருவேங்கடத்தம்மாள் அணிந்திருந்த தாலியுடன் கூடிய தங்கச் சங்கிலியைகுற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் சேர்ந்து அறுத்து விட்டதாக கூறியிருந்தார்.
ஆனால் திருவேங்கடத்தம்மாள் தாலியை மட்டும் இறுகப் பிடித்துக் கொண்டு அதைக் காப்பாற்றியதாகவும்அழகர்சாமி தனது புகாரில் கூறியிருந்தார்.
இந் நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சமர்ப்பிப்பதற்காக தாலியைக் கழற்றித் தருமாறு விசாரணைஅதிகாரியான இன்ஸ்பெக்டர் சந்தானம், திருவேங்கடத்தம்மாளிடம் தெரிவித்தார். ஆனால் கணவர் உயிருடன்இருக்கும்போது தாலியை எப்படிக் கழற்றுவது என்று கூறிய திருவேங்கடத்தம்மாள் தாலியைக் கழற்றித் தர மறுத்துவிட்டார்.
சென்னையில் ஜெயலட்சுமி:
இதற்கிடையே ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரிப்பதை எதிர்த்து அரசு தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதானவிசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை நடக்கிறது. இதற்காக ஜெயலட்சுமி சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்ட அவர் திருவல்லிக்கேணியில் உள்ள மகளிர்காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications