ஐநா சபையில் இன்று மன்மோகன் சிங் உரை
நியூயார்க்:
ஐநா பொது சபைக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று உரையாற்றுகிறார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் ஐநா சபை பொதுச் செயலாளர்கோபி அன்னானை சந்தித்துப் பேசினார்.
அப்போது ஐநா பாதுகாப்பு சபையில் சுழற்சி முறையில் உறுப்பினர் ஆகும் தகுதியை இனி இந்தியா ஏற்காதுஎன்றும், ஐநா சபையை சீரமைத்து அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்றும்வலியுறுத்தினார்.
மேலும் ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை வழங்க வேண்டும் என்றார். இதேகருத்தை இன்று ஐநா சபை பொதுக்கூட்டத்திலும் மன்மோகன் சிங் வலியுறுத்திப் பேசுவார் என்று தெரிகிறது.
முன்னதாக நியூயார்க் பங்குச் சந்தையில் பேசிய பிரதமர் சிங், இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள்தொடரும். அதே நேரத்தில் விவசாயிகள், ஏழை, எளியவர்களின் நலன் பாதிக்கப்படாத அளவுக்கு, அவர்களும்பலன் பெரும் வகையில் சீரிதிருத்தங்கள் இருக்கும்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு இந்தியா அஞ்சவில்லை. வளர்ந்து வரும் சீனா மற்றும் இந்தியாவின்பொருளாதாரத்துக்கு இடம் கொடுக்கும் அளவுக்கு உலகப் பொருளாதாரம் அதிக விஸ்தாரமானது தான் என்றார்.
பின்னர் பிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியளித்த மன்மோகன் சிங், பாகிஸ்தானுடனான உறவைவலுப்படுத்த இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான்முன் வந்தால் தான் அமைதி சாத்தியமாகும்.
காஷ்மீர் பிரச்சனை மட்டுமின்றி பாகிஸ்தானுடனான எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க இந்தியா ஆர்வமாகஉள்ளது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவைக் கண்டு இந்தியா அஞ்சவில்லை.ஆப்கானிஸ்தான் போன்ற பிரச்சனைகளால் பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய நிலையில்அமெரிக்கா உள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவுடனான அமெரிக்க உறவு பன்முகத் தன்மை கொண்டது. பொருளாதாரத்தில்ஆரம்பித்து சர்வதேச விவகாரங்கள் வரை அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முக்கியத்துவத்தை அமெரிக்காஉணர்ந்துள்ளது என்றார்.
நாளை பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுகிறார்.
முன்னதாக இச் சந்திப்பு குறித்து முஷாரப் கூறுகையில், மன்மோகன் சிங் பிரதமரான பிறகு முதல் முறையாகசந்திக்கவிருக்கிறேன். இந்த சந்திப்பு, அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும்என எதிர்பார்க்கிறேன். நான் திறந்த மனத்துடன் உள்ளேன் என்றார்.
பின்னர் நியூயார்க்கில் அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, உலக வர்த்தகக் கட்டடங்கள் இடிக்கப்பட்டஇடத்திற்கு தனது மனைவி குர்சரண் கெளருடன் சென்று பிரதமர் சிங் அஞ்சலி செலுத்தினார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications