மோசடி: பிரான்சில் தவிக்கும் நாமக்கல் இளைஞர்
நாமக்கல்:
போலி பாஸ்போர்ட், மோசடி புரோக்கர் மூலம் லண்டன் செல்ல முயன்ற நாமக்கல் வாலிபர் ஒருவர் பிரான்சில் பரிதவித்து வருகிறார்.
நாமக்கல் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் சுந்தரத்தின் மகன் தினேஷ். இவருக்கு லண்டனில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பாலகிருஷ்ணன் என்ற புரோக்கரிர் ரூ. 3 லட்சம் வாங்கினார்.
பாஸ்போர்ட்டே இல்லாத தினேஷின் போட்டோவை வேறு ஒருவரின் பாஸ்போர்ட்டில் ஒட்டி மோசடி செய்து, பாங்காக் வழியாகலண்டனுக்கு அனுப்பினார் பாலகிருஷ்ணன். ஆனால், லண்டன் விமான நிலையத்தில் தினேஷ் இங்கிலாந்து போலீசாரிடம் பிடிபட்டார்.
அவரிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களையும் பறிமுதல் செய்து அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பினர்.அத்தோடு திருந்தாத தினேஷ் மீண்டும் லண்டன் செல்ல முயன்றார்.
2 மாதம் கழித்து பாரீஸ் வழியாக லண்டன் அழைத்துச் செல்வதாகக் கூறிய பாலகிருஷ்ணன், தினேஷை பிரான்சுக்கு அனுப்பி வைத்தார்.அங்கு ஒருவர் தினேஷை லண்டனுக்கு அழைத்துச் செல்வார் என்று புரோக்கர் கூறியிருந்தார்.
ஆனால், பிரான்சுக்குச் சென்று 5 மாதங்கள் ஆகியும் தினேஷ், லண்டன் அழைத்துச் செல்லப்படவில்லை. அந் நாட்டு போலீசாரிடம்இதுவரை சிக்காத தினேஷ், உணவுக்கும், தங்குவதற்கும் சிரமப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இந் நிலையில், லண்டன் அனுப்ப வேண்டுமானால், கூடுதலாக ரூ. 2 லட்சம் தர வேண்டும் என்று தினேஷின் தந்தை சுந்தரத்திடம்பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம், நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போலீஸார்பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிரான்சில் சிக்கியுள்ள தினேஷ் திரும்பி இந்தியா வர முயற்சிக்காதது ஏன் என்று தெரியவில்லை. அவர் இன்னும் லண்டன் செல்லும்கனவிலேயே இருப்பதாகத் தெரிகிறது.
தினேஷைப் போலவே நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களும் ஏஜென்டுகளால் பிரான்சில் இறக்கி விடப்பட்டுஅலைகழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications