பண்ணையார் நினைவு நாள்: போலீஸ் உஷார் !
தூத்துக்குடி:
சென்னையில் போலீஸாரால் எண்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நாடார் சமுதாயப் பிரமுகர் வெங்கடேஷ் பண்ணையாரின்முதலாமாண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படவுள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி, சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவராக இருந்தவர் வெங்கடேஷ் பண்ணையார். சென்னையில் கடந்த ஆண்டுசெப்டம்பர் 26ம் தேதி காலை சென்னை போலீஸாரால் அவரது அடுக்கு மாடிக் குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
என்கெளண்டர் மரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும் இந்த சம்பவம் நாடார் சமுதாயத்தினர் மத்தியில் பெரும் கோபத்தைஏற்படுத்தியது. இந்த பரபரப்பை பயன்படுத்திக் கொண்ட திமுகவும், வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியைதிருச்செந்தூர் தொகுதியில் நிறுத்தி எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றது.
இந் நிலையில் பண்ணையாரின் முதலாமாண்டு நினைவு தினம் நாளை திருச்செந்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரானஅம்மன்புரத்தில் அனுசரிக்கப்படவுள்ளது.
இதையொட்டி அம்மன்புரம், திருச்செந்தூர், ஆழ்வார்குறிச்சி, தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர தென்மாவட்டங்களிலும் சென்னையிலும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் பல்வேறு கட்சிப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்த வருகிறார்கள். ஆனால் அதிமுகவைச்சேர்ந்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என ராதிகா செல்வி கூறியிருப்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications