ஜெயலட்சுமி: போன் மூலம் ஷாஜகான் காவல் நீட்டிப்பு
சிவகாசி:
ஜெயலட்சுமி விவகாரத்தில் கைதாகியுள்ள சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் உள்ளிட்ட 3 பேரின் சிறைக் காவலைதொலைபேசி மூலம் சிவகாசி மாஜிஸ்திரேட் நீட்டித்து உத்தரவிட்டார்.
ஜெயலட்சுமியின் தாயார் திருவேங்கடத்தம்மாள், சகோதரர் சீனிவாசன் மற்றும் மகன் ஆகியோரைக் கடத்தியதாகதொடரப்பட்டுள்ள வழக்கில் சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைப்பட்டறை அதிபர் முருகவேல்ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது காவல் முடிவடைந்ததால் அவர்களது காவலை, வீடியோ கான்பரன்சிங் மூலம் நீட்டிக்க ஏற்பாடுசெய்யப்பட்டது. ஆனால் சிறைச்சாலைக்கும், நீதிமன்றத்திற்கும் இடையே தொடர்பு கிடைக்கவில்லை.
இதனால் வீடியோ கான்பரன்சிங் மூலம் காவலை நீட்டிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மதுரைசிறைச் சாலைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மாஜிஸ்திரேட் ஆபிரகாம் லிங்கன், 3 பேரின்காவலையும் 27ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
அரசு காப்பகம் சென்ற ஜெயலட்சுமி:
சென்னையில் இருந்து மதுரை வந்த ஜெயலட்சுமி தனது வீட்டிற்குச் சென்ற பின்பு, முன்பு தான் தங்கியிருந்த அரசுகாப்பகத்திற்கு ஆட்டோவில் சென்றார். அங்கு கண்காணிப்பாளர் மல்லிகாவிடம் தனக்கு ஏதேனும் கடிதம்வந்துள்ளதா என விசாரித்தார். 1 மணி நேரம் அங்கிருந்த அவர் பின்பு தனது வீட்டிற்குத் திரும்பினார்.
அப்போது நிருபர்களிடம் கூறுகையில், போலீஸாரால் எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்ற விபரம்கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். காப்பக முகவரியில் இருந்து கடிதம் எழுதியதால், அதற்கு பதில் ஏதும்வந்துள்ளதா என்று கேட்கவே அங்கு சென்றேன் என்றார்.












Click it and Unblock the Notifications