பலத்த பாதுகாப்புடன் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுகடலில் கரைக்கப்பட்டன.

சென்னை நகரில் வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை சிவசேனா கட்சியைச்சேர்ந்தவர்கள் நேற்று மாலை பட்டினப்பாக்கம், காசிமேடு துறைமுகம் பகுதி கடலில் ஊர்வலமாக எடுத்துச் சென்றுகரைத்தனர்.

இந் நிலையில் இந்து முன்னணி, இந்து மக்கள் உள்பட பல அமைப்புகள் சார்பில் இன்று விநாயகர் சிலைகள்சென்னையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் முரளி அமைப்பினர்கே.கே.நகர் பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்தும், திருவல்லிக்கேணி நாகப்பய்யர் தெருவில் இருந்தும்விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்து பட்டினப்பாக்கம் கடலில் கரைத்தனர்.

இந்து மக்கள் கட்சி எஸ்.வி. ஸ்ரீதரன் அமைப்பினர் கே.கே. நகரில் இருந்தும், திருவல்லிக் கேணி நாகப்பய்யர்தெருவில் இருந்தும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஸ்ரீகணேஷ் மகோத்சவ்அமைப்பினர் பெரிய நாயக்கன் தெருவில் இருந்து மீன்பிடி துறைமுக பகுதிக்கு சிலைகளை கொண்டு சென்றுகரைத்தனர்.

இந்து முன்னணி அமைப்பினர் திருவல்லிக்கேணி, எழும்பூர் புதுப்பேட்டை, ஈ.வே.ரா.சாலை, முத்துசாமி ரோடுபுளியந்தோப்பு, ஐ.சி.எப். பெரம்பூர் பகுதிகளில் இருந்து ஊர்வலமாக சிலைகளை கொண்டு சென்று கரைத்தனர்.ராமகோபாலன் திருவல்லிக்கேணி திருவட்டீசுவரன் பேட்டையில் உள்ள சிலைக்கு பூஜை செய்து ஊர்வலத்தைதுவக்கி வைத்தார்.

இந்த ஊர்வலங்களின் போது சுமார் 10,000 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். கடற்கரையில் ரோவர்கிராப்ட் படகு மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+