இலங்கையில் விடுதலைப்புலிகள் 6 பேர் படுகொலை
கொழும்பு:
இலங்கையில் நடந்த இருவேறு சம்பவங்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கருணாகோஷ்டியினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாவின் சகோதரரும், அவரது 3 தளபதிகளும் விடுதலைப்புலிகளால்கொல்லப்பட்டனர். இந் நிலையில் கருணா கோஷ்டியினர் புலிகள் 6 பேரை சுட்டுக் கொன்றனர். இதனால் இருபிரிவினருக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இச் சம்பவம் குறித்து இலங்கை அரசு, இத்தகைய வன்முறைகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கைக்குஊக்கமளிப்பதாக அமையவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது.
சந்திரிகாவுக்கு ரணில் கடிதம்
இந் நிலையில் விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குமாறு இலங்கைஅதிபர் சந்திரிகா குமாரதுங்காவிற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
புலிகளுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். பேச்சுவார்த்தை தொடர்பாக சந்திரிகாமுன்வைத்துள்ள தேசிய ஆலோசனைக் குழுவை பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதற்கு முன்பு அமைப்பதுதேவையற்றது.
பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட பின்பு சிக்கலான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அந்த நேரத்தில் தேசியஆலோசனைக் குழுவை அமைக்கலாம். அப்போது அந்தக் குழுவில் இடம் பெற எனது கட்சி விருப்பத்துடன்உள்ளது என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications