பல்டி அடிப்பதில் சிறுவன் சாதனை
வேலூர்:
அரசியல்வாதிகள், அரசியலுக்கு வர ஆசைப்படும் திரைப்பட நடிகர்கள் அவ்வப்போது பல்டி அடிப்பது சாதாரணவிஷயம். ஆனால் 5 வயது சிறுவன் ஒருவன், 2 கிலோமீட்டர் தூரம் வரை பல்டி அடித்து கடந்து லிம்கா சாதனைபடைத்துள்ளான்.
வேலூர் மாவட்டம் அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவன் கணேஷ் என்ற ராகுல் கணேஷ். 5 வயதாகும் கணேஷ்யு.கே.ஜி. படித்து வருகிறான். பல்டி அடிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட கணேஷ் அதை சீரியஸாக செய்துவந்தான்.
இறுதியில் பல்டி அடிப்பதில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. இதற்கு பெற்றோர் சோமு மற்றும்பொற்கொடி ஆகியோர் ஊக்கம் கொடுத்தனர்.
இதையடுத்து கணேஷின் பல்டி சாதனை நடந்தது. கணேஷ் படிக்கும் திருமலைக்கோடி நாராயணி வித்யாலயாபள்ளியிலிருந்து வேலூர் நகர் வரையிலான 2 கிலோமீட்டர் தூரம் வரை கைகளால் பல்டி அடித்தபடியே வந்தான்கணேஷ்.
கணேஷின் இந்த சாதனை அப்பகுதியினரைக் கவர்ந்தது. இன்னும் 6 மாதத்தில் 15 கிலோமீட்டர் தூரம் வரை பல்டிஅடிக்கப் போவதாக கணேஷ் கூறுகிறான்.












Click it and Unblock the Notifications