உள்ளாட்சி தேர்தல்: திமுகவுக்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை:
உள்ளாட்சி இடைத்தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளதால் திமுகமற்றும் கூட்டணிக் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 1,093 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கைநேற்று காலை தொடங்கியது. இதையடுத்து வெளிவரத் தொடங்கிய முடிவுகளால் அதிமுக உற்சாகமடைந்துள்ளது.
இதுவரை வெளியான முக்கிய முடிவுகளில் பல அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. குறிப்பாக ராமநாதபுரம்நகராட்சித் தலைவர் பதவியை திமுகவிடமிருந்து அதிமுக வென்று சாதனை படைத்துள்ளது.
திமுக சார்பில்பவானி ராஜேந்திரன் ராமநாதபுரம் நகராட்சித் தலைவராக இருந்து வந்தார். மக்களவைத் தேர்தலில்போட்டியிட்டு எம்.பி. ஆனதால் தனது நகராட்சித் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் அங்குஇடைத்தேர்தல் நடந்தது.
இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமமூர்த்தி 1,574 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் திமுகவைச் சேர்ந்த ரத்தினத்தைதோற்கடித்து வெற்றி பெற்றார். திருமங்கலம் நகராட்சித் தலைவர் பதவியையும் அதிமுக தக்க வைத்துக் கொண்டது.
சென்னை மாநகராட்சி 7வது வார்டுக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சண்முகம் வெற்றி பெற்றார்.இங்கு தான் வாக்குப்பதிவின் போது பயங்கர வன்முறை நடந்தது குறிப்பிடத்தக்கது. சேலம் மாநகராட்சி கவுன்சிலர்இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
நகராட்சி கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுகவும், அதிமுகவும் சம பலத்தில் வென்றுள்ளன.மொத்தம் தேர்தல் நடந்த 16 இடங்களில் அதிமுக 7, திமுக 6, காங்கிரஸ் 1, பாஜக 1, சுயேட்சை 1 என வெற்றிகிடைத்துள்ளது.
கிராம பஞ்சாயத்துக்களுக்கு நடந்த தேர்தலில் அதிமுகவின் கை ஓங்கியுள்ளது. கடைசியாக முடிவு அறிவிக்கப்பட்ட50 இடங்களில் 26 இடங்களில் அதிமுக வென்றுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 20 இடங்களில்வென்றுள்ளன. பாஜக மற்றும் சுயேட்சைகளுக்கு தலா ஒரு வெற்றி கிடைத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்து நின்று கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது திமுக மற்றும் அதன்கூட்டணிக் கட்சிகளுக்கு கலக்கத்தையும், ஆழ்ந்த சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications