மதுரை-டெல்லி எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறையாக மாற்றம்
சென்னை:
மதுரை-டெல்லி இடையிலான தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் இருமுறை ரயிலாகமாற்றப்பட்டுள்ளது.
மதுரைக்கும், டெல்லிக்கும் இடையே தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒரு முறைஇயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் சமீபத்தில் மதுரையில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவால் தொடங்கி வைக்கப்பட்டது.
தொடக்க விழாவின்போது இந்த ரயிலை வாரம் இருமுறை ரயிலாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது. இக்கோரிக்கையை லாலு உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரையிலிருந்து டெல்லிநிஜாமுதீனுக்கு சனி மற்றும் திங்கள்கிழமைகளில் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். அதேபோல,டெல்லியிலிருந்து மதுரைக்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும்.
மதுரையிலிருந்து இரவு 11.45 மணிக்கு ரயில் டெல்லி புறப்படும். டெல்லியிலிருந்து காலை 7.25 மணிக்கு மதுரைபுறப்படும். அக்டோபர் 4ம் தேதி முதல் மதுரையிலிருந்து இந்த ரயில் இயக்கப்படும். அதேபோல, அக்டோபர் 7ம்தேதி முதல் டெல்லியிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கும்.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications