கலிபோர்னியாவில் நிலநடுக்கம்
பார்பீல்ட்:
கலிபோர்னியா மாகாணத்தில் இன்று பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6 என்ற அளவுக்குநில நடுக்கத்தின் தாக்கம் இருந்தது. மேலும் தொடர்ந்து 160 முறை சிறிய அளவிலான நடுக்கங்களும் ஏற்பட்டன.
இதனால் சாலைகளில் பிளவுகளும், சுவர்களில் விரிசலும், குழாய்களில் வெடிப்பும் ஏற்பட்டது. இதில் யாரும்உயிரிழந்தாகவோ, காயமடைந்ததாகவோ தகவல் இல்லை. கலிபோர்னியாவின் நிலநடுக்கத் தலைமையகம்என்று அழைக்கப்படும் பார்க்பீல்ட்டில் தான் இந்த பூகம்பத்தின் மையம் இருந்தது. இங்கு வெறும் 37 பேர் மட்டுமேவசிப்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிக அதிகமான நிலநடுக்கம் ஏற்படும் இடம் பார்க்பீல்ட் என்பதுகுறிப்பிடத்தக்கது.
நில நடுக்கத்தை சாக்ரமெண்டோ பகுதியில் இருந்து லாஸ் ஏன்ஜெல்ஸ் அருகே உள்ள சாண்டா அனா பகுதி வரை350 கி.மீ. தூரத்துக்கு உணர முடிந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், கலிபோர்னியா உள்பட அமெரிக்கா முழுவதுமே நில நடுக்கத்தைத் தாங்கும் வகையில் கடுமையானவிதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டடங்கள் கட்டப்படுவதால், சேதம் பெரிய அளவில் இல்லை என அந்த மையம்கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications
