பிசிசிஐ தலைலவர் தேர்தல்: சரத் பவார் தோல்வி
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மத்திய வேளாண்துறை அமைச்சரும் தேசியவாதகாங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார் தோல்வி அடைந்தார்.
கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அசோக்குமார், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனை தேர்தல் ஆணையராக நியமித்தார். இதனை எதிர்த்து கிரிக்கெட்வாரியத்தின் சார்பில் மேல்முறையீடு செய்தது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், நீதிபதி மோகன் நியமனத்தை ரத்து செய்தது. மேலும்கிரிக்கெட் வாரிய விதிகளுக்கு உட்பட்டு தேர்தலை நேர்மையாக நடத்தவும் உத்தரவிட்டது.
இதனையடுத்து தேர்தல் நடைபெற்றது. வாக்கெடுப்பில் பவாருக்கும் பிசிசிஐயின் துணைத் தலைவராக இருந்தமகேந்திராவுக்கும் (இவர் முன்னாள் தலைவர் டால்மியாவின் ஆதரவாளர்) தலா 15 வாக்குகள் கிடைத்தன.
இறுதியில் தலைவர் பதவியிலிருந்து விலகும் டால்மியா, தன்னுடைய வாக்கை மகேந்திராவுக்கு ஆதரவாகச்செலுத்தி அவரை வெற்றிபெற வைத்தார். கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் புரவலர் என்ற வகையில் அவர்வாக்களித்தார்.
இந் நிலையில் தோல்வியுற்ற சரத் பவார், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடுக்கப் போவதாக தெரிவித்தார்.மகாராஷ்டிரா, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கங்களைச் சேர்ந்த தனது இரு ஆதரவாளர்களை வாக்களிக்க முடியாமல்டால்மியா தடுத்துவிட்டதாக பவார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பவார் மட்டுமின்றி, பிற பதவிகளுக்குப் போட்டியிட்ட அவரது ஆதரவாளர்களும் தோற்றுவிட்டனர். மகாராஷ்டிரமாநில சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பவாருக்கு ஏற்பட்ட இத் தோல்வி ஒருஅரசியல் பின்னடைவாகவே கூறப்படுகிறது.
பவார் மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications