இது ஆணாதிக்க சமுதாயம்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வெளிநாட்டில் பிறந்தவரான காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இந்தியாவின் பிரதமராகக் கூடாது என்ற தனதுகருத்தில் மாற்றமில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பிபிசி தொலைக்காட்சியின் ஹார்ட் டாக் இந்தியா நிகழ்ச்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, சோனியா காந்தியை அரசியல் ரீதியாக விமர்சித்தேன்; தனிபட்டமுறையில் விமர்சிக்கவில்லை என்றுதான் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினேன். மற்றபடி அவரை நான்ஆதரிக்கவில்லை.

சோனியா மட்டுமல்ல, வெளிநாட்டில் பிறந்த எவரும் இந்தியாவின் பிரதமராகக் கூடாது என்ற எனதுநிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக உள்ளேன்.

நான் காரண காரியத்துடன் செயல்படும் பொறுப்பான தலைவி. ஆனால் இதுவரை நான் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளேன். இதற்குக் காரணம் பத்திரிகைகள் தான். அவை எனக்கு எதிரான நிலைப்பாட்டையேஎடுத்து வருகின்றன.

கடந்த 3 வருடங்களாக மட்டுமல்ல, நான் அரசியலில் நுழைந்த நாள் முதல் செய்தி ஊடகங்கள் என்னைப் பற்றிதவறாகவே செய்தி பரப்பி வருகின்றன.

இந்த உலகமே நாடக மேடை. ஒவ்வொருவரும் இதில் நடிக்கிறார்கள். ஆனால் நான் சினிமாவில் கேமிராவுக்குமுன்பு மட்டுமே நடித்துள்ளேன். நிஜ வாழ்க்கையில் எனக்கு நடிக்கத் தெரியாது. நேர்மையாக நடந்துகொள்வதையும், உண்மை பேசுவதையும் மட்டுமே நான் விரும்புகிறேன். அரசியல்வாதிகளில் நான் சற்றுமாறுபட்டவள்.

பத்திரிக்கைகள், டிவிகள் என்னை ஒதுக்குவதற்கு எனது அரசியல் பின்னணியும் காரணமாக இருக்கலாம். நான்ஒரு சாதாரண பெண். ஆசியாவின் மற்ற பெண் தலைவர்கள் போல் எனக்கு பலமான அரசியல் பின்னணி இல்லை.

இந்திரா காந்தி நேருவின் மகளாவார். ஸ்ரீமாவோ பண்டாரநாயகே, பண்டாரநாயகேவின் மனைவி ஆவார்.பெனாசீர் புட்டோ, புட்டோவின் மகள். கலிதா ஷியா, ஷியா உர் ரஹ்மானின் மனைவி. முஜீபுர் ரஹ்மானின் மகள்ஷேக் ஹசீனா. ஆனால் எனக்கு அத்தகைய பின்னணி எதுவுமில்லை.

மேலும் இங்கு அரசியல் என்பது ஆணாதிக்க உலகம். எனக்கு எதுவும் தங்கத் தட்டில் வழங்கப்படவில்லை என்றுகூறியுள்ள ஜெயலலிதா, மேலும் பல விவகாரங்கள் குறித்தும் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

ஆனால், சோனியா விஷயத்தில் கேள்விகளைத் தேர்ந்தெடுத்தே பதிலளித்த ஜெயலலிதா, சோனியா தொடர்பானகாரசாரமான கேள்விகளுக்கு பதில் கூற மறுத்து விட்டார். அதே நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதி கைதுசெய்யப்பட்ட விதம் ஆகியவை குறித்து அதிரடியான பதில்களைத் தந்துள்ளார்.

இந்தப் பேட்டி இன்றிரவு பிபிசியில் ஒளிபரப்பாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+