பெட்ரோல், டீசல் விலை உயராது: மணிசங்கர அய்யர்
டெல்லி:
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையைஉயரத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து இன்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யர்ஆலோசனை நடத்தினார். இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அய்யர்,
கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்தை வைத்துக் கணக்கிட்டால் பெட்ரோலின் விலையை உடனடியாக லிட்டருக்கு15 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 2.82 பைசாவும் உயர்த்த வேண்டும்.
நாட்டில் பண வீக்கம் அதிகரித்து விலைவாசி உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் மத்தியஅரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் டீசல் விலையை உயர்த்தினால் எல்லா பொருட்களின் விலையும்மேலும் கூடிவிடும். அந்த பாரத்தை பொது மக்கள் சுமத்த அரசு விரும்பவில்லை.
கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தாலும் கடந்த 2 மாதமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல்கட்டுப்படுத்திக் கொண்டு வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications