கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜயகாந்த்
சென்னை:
நடிகர் விஜயகாந்த் தான் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியைஆரம்பித்துள்ளார்.
ரசிகர் மன்றத்தில் புதிய அணிகளை உருவாக்கி அதன் மூலம் கட்சியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத்தெரிகிறது. முதற்கட்டமாக வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி ஆகியவற்றுக்கு உறுப்பினர்கள்சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர்களையும், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தமருத்துவர்களையும், ஏதாவது ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்மாணவர்களையும் மட்டுமே அந்தந்த அணியில் சேர்க்குமாறு ரசிகர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
இவைதவிர விவசாய அணி, இளைஞர் அணி, தொழிலாளர் அணி, கலைஞர்கள் அணி, இலக்கிய அணி,தொண்டர் அணி, மகளிர் அணி, நெசவாளர் அணி என்று 10 அணிகள் உருவாக்கப்பட்டு அவற்றில் உறுப்பினர்கள்சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
உறுப்பிர்களாக சேருபவர்களிடம், விஜயகாந்தின் புகழையும் கொள்கையையும் பரப்ப பாடுபடுவேன் என்பதுஉள்ளிட்ட உறுதிமொழி பத்திரத்திலும் கையெழுத்து வாங்கப்படுகிறது. இதற்காக பல லட்சம்விண்ணப்பபடிவங்கள் சென்னை தலைமை மன்றத்தில் இருந்து மாவட்ட மன்றங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 20,000 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பி வந்திருப்பதாகவும்கூறப்படுகிறது.
ஒவ்வொரு அணியினருக்கும் தனித்தனி சீருடைகளை வழங்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர்திரைப்பட ஆடை வடிவமைப்பாளர்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்தி உள்ளார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications