ஜெயலட்சுமி: இளங்கோவனின் ஜாமீன் தள்ளுபடி
சிவகாசி:
ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்தது, பின்னர் அவரையும் குடும்பத்தினரையும் கடத்தியது ஆகியவழக்குகளில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் இளங்கோவனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கசிவகாசி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலட்சுமியின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளவர் மதுரை திடீர் நகர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்.ஜெயலட்சுமியின் புகாருக்குப் பிறகு அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், ஜெயலட்சுமி விவகாரத்தில் தனது பெயர் அடிபட்டவுடன் தலைமறைவாகி விட்ட இளங்கோவன்சமீபத்தில் தான் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஜெயலட்சுமியைக் கடத்திய வழக்கில் இவரது மைத்துனர் முருகவேல் ஏற்கனவே கைதாகி சிறையில்அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளங்கோவன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு சிவகாசிநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாரனேரி போலீஸார், இளங்கோவனை போலீஸ் காவலில்வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவும் விசாரிக்கப்பட்டது.
இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஆபிரகாம் லிங்கன், இளங்கோவனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தார். அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாரனேரி போலீசாருக்கு அனுமதி அளித்தார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications