கிருஷ்ணா நீர் வர ஜெயலலிதா தான் காரணம்: ஓ.பி
சென்னை:
சென்னைக்கு கிருஷ்ணா நீர் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிகளே காரணம் என தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த நெடுஞ்சாலைத் துறையின் விழாவில் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் ஆந்திர முதல்வர்ராஜசேகர ரெட்டியும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பாலு, சென்னைக்கு கிருஷ்ணா நீரைத் திறந்துவிடுமாறு திமுக தலைவர் கருணாநிதி உங்களிடம் கோரிக்கைவிடுக்கச் சொன்னார் என்றார். இதற்கு பதிலளித்த ரெட்டி, 15ம் தேதிக்குள் தண்ணீர் சென்னையை வந்தடையும் என்றுஅறிவித்ததோடு நீரையும் உடனே திறந்துவிட்டார்.
இந் நிலையில் இதே கோரிக்கையுடன் முதல்வர் ஜெயலலிதாவும் நேற்று ரெட்டியை சந்தித்தார்.
அப்போது ஸ்ரீசைலம் அணையிலிருந்து சென்னைக்கு 21 டி.எம்.சி நீர் திறந்து விடப்பட்டிருப்பதாகஜெயலலிதாவிடம் ரெட்டி தெரிவித்தார். இந்த நீர் 15 நாட்களுக்குள் சென்னை எல்லையை வந்தடையும் என்றும்கூறினார்.
இந் நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கருணாநிதியின் முயற்சி காரணமாகவே கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக சில பத்திரிக்கைகளில் தவறானசெய்திகள் வெளியிடப்படுகின்றன.
முதல்வர் ஜெயலலிதாவின் தொடர்ந்த முயற்சிகள் காரணமாக, இரு மாநில தொழில்நுட்ப நிபுணர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்தார் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி. பின்னர் இரு மாநில பொறியாளர்கள் அடங்கிய குழு தற்போதைய நிலையில்சென்னைக்கு எவ்வளவு தண்ணீர் விடுவது என்பது குறித்து கூட்டாக ஆய்வு நடத்தின.
இதன் தொடர்ச்சியாக முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து தான்கிருஷ்ணா நதியிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே கிருஷ்ணாவிலிருந்து தண்ணீர் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிகளே முக்கியக் காரணம்என்று கூறியுள்ளார் பன்னீர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications