21 வயது நிரம்பியவர்களுக்கே இனிமேல் மது விற்பனை
சென்னை:
தமிழகத்தில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை விற்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடனமாடிய ஸ்டெபானி என்ற இளம்பெண்ணை நான்கு இளைஞர்கள் போதையுடன்காரில் துரத்திச் சென்றதில், கார் மோதி அந்தப் பெண் இறந்தார். அந்த நான்கு இளைஞர்களில் டென்வர் என்பவர் ப்ளஸ் 2 மாணவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம்1937-ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு மது சில்லறை விற்பனை விதிகளில் புதிதாக 11ஏ என்ற விதிசேர்க்கப்படுகிறது. இந்த விதிப்படி 21 வயது முடியாதவர்களுக்கு எந்த வகை மதுபானத்தையும் விற்கவோ, சப்ளை செய்யவோ கூடாதுஎன்று மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து வகையான பார் லைசென்ஸ்தாரர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.
மதுபானம் வாங்க வருபவர் அல்லது அருந்த வருபவரின் வயது குறித்து சந்தேகம் எழுந்தால், அவரிடம் மத்திய, மாநில அரசு அல்லதுகல்வி நிறுவனம் அளித்த வயது சான்றிதழை வாங்கி சரிபார்த்து விட்டு தான் மது சப்ளை செய்ய வேண்டும். இந்த விதி உடனடியாகஅமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
உத்தரவுகளை மட்டும் வெளியிட்டார் போதாது. இதை ஒயின்ஷாப்காரர்கள் முறையாக அமலாக்கிறார்களா என்பதையும் அரசுகண்காணிக்க வேண்டியது அவசியம்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications