கடலூர் மாவட்டத்தில் 7 தமிழ் தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் தமிழ் தீவிரவாதிகள் 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸார்தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல இடங்களில் வாகன சோதனையும் நடந்தது.

அப்போது கடலூர் கிளைச் சிறைச்சாலை ரோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகே சந்தேகத்திற்கிடமாகமோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை போலீஸார் சோதனை செய்தனர்.

சோதனையில் அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் போலீஸார் அவர்களைகைது செய்தனர். விசாரணையில் அவர்களில் புதுக்குப்பம் பாருக்கான் (27), குண்டு உப்பளவாடி ஜெகன் (28)என்று தெரிய வந்தது. 2 பேரும் தமிழ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதேபோல் மந்தாரக் குப்பத்தில் மேலும் இரண்டு தமிழ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மனோகரன், சுதாகர் என்பது தெரிய வந்தது.அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றினர்.

இதே போல் வடலூரில் நடந்த சோதனையில் அண்ணாதுரை, சக்திவேல், ஆசைத்தம்பி என்ற 3 தமிழ்தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரிடமும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+