அதிமுகவின் பலம் அதிகரித்துள்ளது: தொல். திருமாவளவன்
மதுரை:
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக தனது வாக்கு வங்கியை பலப்படுத்தியுள்ளது. சமீபத்தியஉள்ளாட்சி இடைத் தேர்தல் இதைக் காட்டுவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் 27 சதவீத வாக்குகளைப் பெற்றஅதிமுக சமீபத்திய உள்ளாட்சி இடைத் தேர்தலில் தனது வாக்கு வங்கியை பலப்படுத்தி, கூட்டியுள்ளது.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும்வாக்களித்தார்கள். ஆனால், வாக்களித்த மக்களை மறந்து விட்டு, பதவியைப் பிடிக்கவும், பணம் சம்பாதிக்கவுமேஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மும்முரமாக இருந்தன. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்று கோரி டாக்டர் ராமதாஸ்,டாக்டர் சேதுராமன், பழ. நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் பாதுகாப்பு இயக்க தலைவர்கள், சென்னையில் கடை,கடையாக சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கவுள்ளனர்.
நவம்பர் 2ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை இந்தப் பிரசாரம் நடைபெறும். தமிழகத்தில் தமிழைப்பயன்படுத்துங்கள் என்று கூறிப் பிரசாரம் செய்வதில் தப்பே இல்லை. நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை,மிரட்டவில்லை, வற்புறுத்தவில்லை. தமிழகத்தில் உள்ளவர்கள் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான்கேட்கிறோம் என்றார் திருமாவளவன்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications