வேலை நிறுத்தத்தில் குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

20 சதவீத போனஸ் கோரி தமிழக மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மின்வாரிய நிர்வாக இயக்குனரிடம் வேலை நிறுத்த முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

தீபாவளி வரும் பின்னே ஸ்டிரைக் வரும் முன்னே. இது தான் ஆண்டாண்டு காலமாக தமிழகத்தில் நடந்துவருகிறது. தீபாவளிக்கு 6 மாதத்துக்கு முன்பே அதிக போனஸ் கோரி பஸ், மின் வாரியம், ரேசன் கடை ஊழியர்கள்வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துவிடுவார்கள்.

குறிப்பாக போக்குவரத்து ஊழியர்கள் தீபாவளிக்கு முதல் இரண்டு நாட்கள் பஸ்களை நிறுத்தி, பண்டிகைகொண்டாட ஊர் செல்ல விடாமல் பொது மக்களுக்கு இடைஞ்சல் தருவார்கள்.

ஆனால், அரசு ஊழியர் போராட்டத்தை அரசு இரும்புக் கரத்துடன் ஒடுக்கியதையடுத்து சமீப காலமாக ஸ்டிரைக்என்ற குரலே எழவில்லை. இந் நிலையில் வரும் தீபாவளியை முன் வைத்து மீண்டும் தமிழகத்தில் ஸ்டிரைக் சத்தம்கேட்க ஆரம்பித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக மின் வாரியம் உள்ளிட்ட அரசுத் துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ்(குறைந்தபட்ச போனஸ்) வழங்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இந்த ஆண்டு 20 சதவீத போனஸ் தர வேண்டும்என்ற கோரிக்கையை போக்குவரத்து, மின் வாரிய, நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக வேலை நிறுத்தம் செய்யவும் ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. கடந்த மாதம்போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர். நேற்று நுகர்பொருள் வாணிப் கழகஊழியர் சங்கம் நோட்டீஸை வழங்கியது.

இந் நிலையில் இன்று மின்வாரிய ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்த நோட்டீஸை வழங்கியுள்ளது.மின்வாரியத்தின் நிர்வாக இயக்குநரை சந்தித்து இந்த நோட்டீஸை ஊழியர் சங்க நிர்வாகிகள் கொடுத்தனர்.

அதில், இந்த ஆண்டு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும், காலியாக உள்ள 25,000 பணியிடங்களைஉடனடியாக நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்வைக்கப்பட்டுள்ளன.

இக் கோரிக்கைகளை முறையாக நிறைவேறாவிட்டால் வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்நடைபெறும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

பொது மக்களே, சிம்னி விளக்கு, பெட்ருமாக்ஸ் லைட்களை ரிப்பேர் பார்த்து ரெடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்!

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+